ஆஸி தொடருக்கு ரெடியாகும் பயணத்தில் அந்த வங்கதேச ஸ்பின்னர் டஃப் கொடுக்கலாம்.. இந்திய அணியை எச்சரித்த ஓஜா

Pragyan Ojha
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்க உள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் அந்தத் தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 12 வருடங்களாக சொந்த ஊரில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.

ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானையும் அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி வங்கதேசம் வரலாறு படைத்தது. எனவே அந்த உத்வேகத்துடன் இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்திருந்தார். குறிப்பாக பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆல் ரவுண்டராக அசத்திய மெஹதி ஹசன் தொடர்நாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

எச்சரிக்கையா இருங்க:

எனவே அவர் இந்தியாவை வீழ்த்த உதவுவார் என்று நம்புவதாக நஜ்முல் சாண்டோ தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் போல மெஹதி ஹசன் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார் என்று முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா எச்சரித்துள்ளார். எனவே அவரிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கவனத்துடன் விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் நவம்பர் மாதம் துவங்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பயிற்சி எடுக்கும் இடமாக வங்கதேச தொடர் இருக்கும் என ஓஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வங்கதேசம் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணி அவர்களிடம் நல்ல ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். குறிப்பாக மெஹதி ஹசன் பாகிஸ்தான் தொடரில் தொடர்நாயகன் விருது வென்றார்”

- Advertisement -

ஆஸ்திரேலிய தொடர்:

“செயல்படும் விதத்தில் அவர் நல்ல பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின்னராக தெரிகிறார். அதே போல சாகிப் அல் ஹசன் இருப்பதால் இத்தொடர் எளிதாக இருக்காது. குறிப்பாக சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் அவர்களுக்கு எதிராக இந்தியா விளையாடுவது கொஞ்சம் ட்ரிக்காக இருக்கும். அதற்காக வங்கதேசம் நமக்கு சவால் கொடுக்கும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் நல்ல போராட்டத்தை கொடுக்கலாம்”

இதையும் படிங்க: இவ்ளோ பெரிய விராட் கோலி.. என்னோட தலைமையில் விளையாடியதை ஏன் பேசல? பிரபல கட்சி சேர்மேன் பேட்டி

“ஏனெனில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய அவர்கள் சரியான பாதையில் பயணிக்கின்றனர். மறுபுறம் நமது வீரர்கள் இங்கே விளையாடி ஆஸ்திரேலியா தொடருக்கு தயாராவார்கள். ஆஸ்திரேலியா கடந்த 2 தொடர்களை சொந்த மண்ணில் வெல்லவில்லை என்பது நமக்குத் தெரியும். எனவே இம்முறை அவர்கள் இந்தியாவை வீழ்த்த விரும்புவார்கள். அதனால் வங்கதேசத்துக்கு எதிரான இத்தொடர் இந்திய அணிக்கு அந்தத் தொடருக்கான வேகத்தை கொடுக்கும் முக்கிய தொடராக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement