- Advertisement -
ஐ.பி.எல்

கவலைப்படாதீங்க.. ரோஹித் மும்பையை விட்டு போகமாட்டாரு.. காரணம் இது தான்.. பிரக்யான் ஓஜா நம்பிக்கை

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக காணப்படுகிறது. கடந்த 2013 முதல் மும்பை அணிக்காக அவர் விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் 2023 வரை கேப்டனாக செயல்பட்ட அவர் மும்பை இந்தியன்ஸ் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த வருடம் அவரை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே உச்சகட்டை எதிர்ப்புகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து 37 வயதாகும் ரோஹித் சர்மாவை 2025 மெகா ஏலத்தில் மும்பை மொத்தமாக கழற்றி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ரோஹித் சர்மா வெளியேறுவாரா:

சொல்லப்போனால் மும்பை அணியில் ரோகித் சர்மாவின் கேரியர் முடிந்து விட்டதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற ரோஹித் சர்மாவை லக்னோ வாங்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த செய்திகள் மும்பை ரசிகர்களிடம் ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் மும்பை அணியை விட்டு ரோஹித் சர்மா செல்ல மாட்டார் என்று நம்புவதாக மற்றொரு முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒரு வீரராகவும் கேப்டனாகவும் வளர உதவிய மும்பையை விட்டு ரோஹித் செல்ல மாட்டார் என்று ஓஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஓஜா நம்பிக்கை:

“எனக்குத் தெரிந்த வரை ரோகித் சர்மா மும்பை அணியின் முக்கிய அங்கமாகவே இருக்கிறார். மும்பை அணியிலிருந்து வெளியேறுவது ரோஹித் சர்மாவுக்கு எளிதாக இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது ரோகித் சர்மாவுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும். இருப்பினும் தொழில் முறை கிரிக்கெட்டில் சில நேரங்களில் மேசையில் முன்னே இருக்கும் முடிவுகளை நீங்கள் எடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: 300 ரன்ஸ் அடிச்சப்போ நல்லாருந்துச்சா? ஆப்கன் வாரிய விமர்சனத்துக்கு நொய்டா மைதான மேனஜர் பதிலடி

“ஒருவேளை ரோகித் சர்மா மும்பை அணியிலிருந்து வெளியேறினால் அது உணர்வுபூர்வமாகவும் எளிதற்றதாகவும் இருக்கும். தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மா மும்பைக்கு விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் மும்பை அணியில் தான் இன்று இருக்கும் கேப்டனாகவும் வீரராகவும் ரோஹித் சர்மா வளர்ந்தார். எனவே அவர் அங்கேயே இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அங்கிருந்து நகர்ந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை” என்று கூறினார்.

- Advertisement -