ஆஸ்திரேலிய தொடரில் இந்த ஒரு விஷயத்தில் நிச்சயம் இந்திய அணி தடுமாற்றம் அடையும் – பாண்டிங் ஓபன்டாக்

Ponting
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட போகிறது. 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்த மிக நீண்ட சுற்றுப்பயணத்தில் இருந்தாலும் டெஸ்ட் தொடர் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2018ஆம் ஆண்டில் இந்திய அணி சென்ற விளையாடியபோது வரலாற்றுச் சிறப்பு மிக்க வகையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

INDvsAUS

- Advertisement -

71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி இம்முறையும் தொடரை தக்கவைக்க ஆர்வம் காட்டும். இந்நிலையில் தற்போதும் விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். தற்போது இந்த டெஸ்ட் தொடரில் ஏற்பட்டுள்ள பிரச்சனை என்னவென்றால் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த உடன் விராட் கோலி இந்தியா திரும்பி விடுவார்.

அவருக்கு முதல் குழந்தை பிறக்கப்போகிறது. இதன் காரணமாக கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என்று பிசிசிஐ அறிவித்திருந்தது. இதனையடுத்து அவருக்கு பதிலாக யாரை சேர்ப்பது என்று தற்போது பிசிசிஐ யோசித்து வருகிறது. இது குறித்து பேசியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில்…

Kohli

விராட் கோலி இல்லாத 3 போட்டியில் இந்திய அணிக்கு பேரிழப்பு தான். அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்சி இல்லாமல் இந்திய அணி அழுத்தத்தை உணரும். அது அப்படியே அணியில் உள்ள வீரர்களுக்கு கடத்தப்படும் கேப்டன் பொறுப்பை அஜின்கியா ரகானேவிடம் ஒப்படைத்தால் அவருக்கான பிரச்சினைகளும் அதிகமாகும்.

Kohli 4

அதே நேரத்தில் பேட்டிங் வரிசையில் 4வது இடத்தில் ஆடும் சரியான வீரரை தெரிவு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து குழப்பம் நீடித்துக் கொண்டே இருந்தால் முதல் டெஸ்ட் போட்டியிலும் சரியான அணியை அந்த அணியால் களமிறக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார் ரிக்கி பாண்டிங்.

Advertisement