லைன் அண்ட் லென்த் எல்லாம் அட்டகாசம். மற்றொரு சூப்பர் பாஸ்ட் பவுலர் கிடைச்சாச்சி – பாண்டிங் புகழாரம்

Ponting
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று பாக்சிங் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது முதல் நாள் ஆட்டநேரம் முடிவதற்கு முன்பாக தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

bumrah

- Advertisement -

அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி இளம் வீரரான மார்னஸ் லாபுஷேன் 48 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 38 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அறிமுக வீரர் முகமது சிராஜ் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்திய அணி பந்து வீச்சாளர்களின் இந்த சிறப்பான பந்துவீச்சு தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் ரஹானேவின் கேப்டன்சியும் அதிகளவு பாராட்டுகளை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கூட தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரஹானேவின் கேப்டன்ஷிப் குறித்து மனம்திறந்து புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Sehwag

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் பந்து வீச்சு குறித்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சிராஜின் ஆக்ரோஷம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரின் பந்துவீச்சில் உள்ள லைன் அண்ட் லென்த் எல்லாம் அற்புதமாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மற்றுமொரு சிறந்த பந்துவீச்சாளர் கிடைத்து விட்டார் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அதிக முறை அவரது பந்துவீச்சில் எல்பிடபிள்யூ அப்பீல் எழுப்பபட்டது.

siraj 2

அதுமட்டுமின்றி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சரியான அளவில் சிறப்பான வேகத்தில் அவர் தொடர்ச்சியாக பந்து வீசுகிறார். ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் வீசும் அவர் புதிய பந்தில் ஷார்ட் பிட்ச் பந்து வீச அதிகம் விரும்பி உபயோகிக்கிறார். ஏற்கனவே இந்திய அணியில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி வரும் நிலையில் அடுத்த நம்பிக்கையான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் நிச்சயம் வருவார் என்று பாண்டிங் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement