இந்திய வீரரான இவரை பற்றி உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பேசுகிறார்கள் – பாண்டிங் புகழாரம்

Ponting
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவரது ஓய்வு முடிவை எதிர்பார்க்காத ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் அவர் குறித்த செய்திகள் நின்றபாடில்லை. பல்வேறு தரப்பிலிருந்தும் டோனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தோனி குறித்து பேசியுள்ளார். இது குறித்து ஆஸ்திரேலிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : தோனி போட்டியின் எந்தவொரு சூழலிலும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் இருப்பார்.

அதுதான் ஒரு அணி தலைவருக்கான மிக முக்கிய அடையாளமாக பார்க்கிறேன் நானும் அதுபோன்று முயற்சி செய்துள்ளேன். ஆனால் அது முடியாமல் போனது என்றார். மேலும் தொடர்ந்து பேசிய பாண்டிங் கூறுகையில் : தோனி கேப்டனாக இருந்த காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய எழுச்சியை பெற்றது.

ponting

ஒரு கேப்டனாக இருந்து வீரர்களிடம் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் திறன் தோனிக்கு இருந்தது. தோனி கேப்டனாக இருக்கும் வரை இந்திய அணியை ஒரு கட்டுக்குள் வைத்திருந்தார். அந்த அணியில் இருந்த சக வீரர்களும் அதை ரசித்து விளையாடியதால் தான் அவரால் சிறந்த வெற்றிகரமான கேப்டனாக இருக்க முடிந்தது என்று கூறியுள்ளார்.

Dhoni

தற்போது டெல்லி கேப்பிடல் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் பாண்டிங் இந்தியாவில் அதிக நேரத்தை செலவிடுவதால் எனக்கு நன்றாக புரிகிறது இந்திய நாட்டின் எத்தகைய பகுதியிலிருந்து தோனி உருவாகி இருக்கிறார் என்று கூறியுள்ளார். உலகம் முழுவதும் பயணம் செய்தாலும் தோனியைப் பற்றி யாரும் பேசாமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு அவர் கிரிக்கெட்டில் புகழ் பெற்றுள்ளார் தோனி என புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement