இவங்க 2 பேர் போதும் நாங்கதான் இந்த வருஷம் ஐ.பி.எல் சாம்பியன் – டெல்லி பயிற்சியாளர் பாண்டிங் அதிரடி

Ponting
- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒரு முறை கூட ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை. ஆனால் கடந்த இரண்டு வருடமாக அந்த அணியில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அந்த அணிக்கு பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த முறை பல இந்திய வீரர்கள் டெல்லி அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள். ரவிச்சந்திரன் அஸ்வின், அஜின்கியா ரஹானே, இஷாந்த் ஷர்மா, பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் போன்ற பல இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த முறை இந்த அணி கோப்பையை வெல்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் அஜின்கியா ரகானே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இரண்டு வீரர்களை வைத்து இந்த முறை கோப்பையை வெல்லுவோம் என்று தெரிவித்திருக்கிறார் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

அவர் கூறுகையில் : ஐபிஎல் தொடரில் மிகவும் சிறந்த அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் இப்போது எங்கள் அணியில் இணைந்துள்ளார். சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் இவரது அனுபவம் எங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும். அதேபோல் அஜின்கியா ரஹானே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார்.

Ashwin 2

இவர்கள் இருவரது அனுபவம் எங்களுக்கு கை கொடுக்கும். இந்த இருவரும் அணி வீரர்களின் கலவை சரியாக அமைந்திருப்பதால் டெல்லி அணி இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த இருவரும் பல போட்டிகளை தன்னந்தனியாக நின்று வென்று கொடுப்பதில் வல்லவர்கள் என்று தெரிவித்து இருக்கிறார் ரிக்கி பாண்டிங்.

ஏற்கனவே ரிக்கி பாண்டிங் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவருக்கும் தொடங்கும் முன்னே “மான்கட்” விக்கெட் குறித்த வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ரஹானே தான் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய தயார் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement