இவருக்கு சரியான மரியாதை இந்திய அணியில் கிடைக்கவில்லை. இந்திய பவுலர்களில் இவர் ஒரு லெஜன்ட் – பொல்லாக் புகழாரம்

Pollock
- Advertisement -

முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனும், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவருமான ஷான் பொல்லாக் தன்னுடைய காலத்தில் முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு இணையாக தென்னைப்பிரிக்க அணிக்காக மிகச்சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். அவர் இன்றுவரை தென்னாபிரிக்க அணியின் முக்கிய பந்துவீச்சாளராக பார்க்கப்பட்டு வருகிறார். அவர் விளையாடிய காலத்தில் பல்வேறு சிறந்த வரிசையில் இவரது பெயரும் நிச்சயம் உண்டு.

Pollock 1

- Advertisement -

இந்நிலையில் அவர் ஆடிய காலத்தில் நிகழ்ந்த தருணங்களையும், அவரின் கிரிக்கெட் அனுபவங்கள் குறித்தும் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். குறிப்பாக இந்திய வீரர்களை பற்றியும் இதில் அவர் பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீநாத் பற்றி பேசியுள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் பேசியதாவது : இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கருதுகிறேன். நான் ஆடும் காலத்தில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் வக்கார் யூனிஸ் போன்ற பல அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர் .

Srinath 1

அதேபோல் இந்தியாவிற்கும் ஜகவல் ஸ்ரீநாத் இருந்தார். அவருக்கு கை கொடுக்க மற்றொரு பந்துவீச்சாளர் இல்லை. மேற்கிந்திய தீவுகளில் கர்ட்லி ஆம்புரோஸ் மற்றும் கோர்ட்னி வால்ஷ் ஆகியோர் இணைந்து எதிரணிகளை துவம்சம் செய்தனர். அதேபோல் ஆஸ்திரேலியாவிற்கு கிளன் மெக்ராத் மற்றும் பிரட் லீ இருந்தனர்.

Srinath

ஆனால் இந்தியாவிற்கு ஒரே ஒருவர் தான் இருந்தார். ஸ்ரீநாத்திற்கு அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் தற்போது வரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். 2003 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் ஓய்வு பெற்ற ஸ்ரீநாத் தற்போது ஆட்ட நடுவராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement