டாஸ் போட்டவுடன் இந்திய அணியின் தோல்வியை உறுதி செய்த பொல்லார்ட் – விவரம் இதோ

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

ind vs wi

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் திருவனந்தபுரம் மைதானத்தில் துவங்க உள்ளது. தற்போது டாஸ் போடப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியை சோதித்துப் பார்க்கவே பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஏனெனில் இந்திய அணி சேசிங் செய்யும்போது எப்போதுமே சிறந்த அணியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதே போன்று முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது அந்த அளவுக்கு வெற்றிபெறும் விகிதம் இந்திய அணியிடம் இல்லை இதை நாம் பல தொடர்களில் பார்த்தோம்.

kohli 3

அதனை இந்த போட்டியில் கையிலெடுத்திருக்கிறார் பொல்லார்ட் எனவே சேஸிங்கில் பலமாக இருக்கும் இந்திய அணி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்வதால் எவ்வாறு ஆட போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் தற்போதுள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளதால் ஓரளவு ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை கட்டுப்படுத்துமா இல்லை வெஸ்ட் இண்டீஸ் அதிரடியாக ஆடி இலக்கை எட்டுமா என்று இன்று தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement