டாஸ் போட்டவுடன் மீண்டும் இந்திய அணியின் தோல்வியை உறுதி செய்த பொல்லார்ட் – விவரம் இதோ

Pollard

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் இருக்கின்றன. இந்நிலையில் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கிறது.

ind vs wi

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க உள்ளது. தற்போது டாஸ் போடப்பட்ட நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

இந்த போட்டியிலும் இந்திய அணியை சோதித்துப் பார்க்கவே பொல்லார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஏனெனில் இந்திய அணி சேசிங் செய்யும்போது எப்போதுமே சிறந்த அணியாக செயல்பட்டு வருகிறது. ஆனால் அதே போன்று முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும்போது அந்த அளவுக்கு வெற்றிபெறும் விகிதம் இந்திய அணியிடம் இல்லை இதை நாம் பல போட்டிகளில் பார்த்தோம்.

திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் போதும் பொல்லார்ட் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சிவம் துபேவின் அதிரடியான ஆட்டத்தால் ஓரளவுக்கு சுமாரான ரன்களை குவித்தது. ஆனால் பின்னால் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்காததால் இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எனவே இந்தப் போட்டியிலும் பொல்லார்ட் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியாவை பெரிய ரன்கள் அடிக்கவிடாமல் நிறுத்தி வெற்றி பெறவே பொல்லார்ட் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே இந்த போட்டியில் சற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.