இந்த போட்டியில் ஜெயித்தாலும் எங்களது தவறை திருத்தி ஆகவேண்டும் – பொல்லார்ட் பேட்டி

Pollard

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துபே 54 ரன்கள் குவித்தார்.

ind vs wi

அதன்பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சிம்மன்ஸ் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறியதாவது : இந்தப் போட்டியில் எங்களது வீரர்கள் சிறப்பாக ஆட்டத்திற்கு திரும்பியுள்ளனர். இந்தியாவை 170 சுருட்டியது சிறப்பான விடயமாகும். மேலும் எங்களுடைய பேட்டிங்கும் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக இருந்தது. எங்களுடைய வீரர்கள் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை திரும்பியதில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்பத்தில் சிம்மன்ஸ் ஸ்லோவாக ஆடினாலும் அவர் ஒரு சீனியர் வீரர் என்பதை அவரது ஆட்டத்தின் மூலம் காண்பித்தார்.

wi 1

மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழிநடத்துவது எனக்கு மகிழ்ச்சியான ஒன்றாகும். ஏனெனில் இந்தியாவில் நான் நிறைய கிரிக்கெட் போட்டிகளை ஆடியுள்ளேன் எனவே இந்திய மண்ணில் இவர்களுக்கு எதிராக எப்படி ஆட வேண்டும் என்று ஓரளவுக்கு எனக்கு தெரியும். ஆனால் நாங்கள் தற்போது கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்த போட்டியில் வைட் மற்றும் நோபால் ஆகியவை அதிகமாக வீசப்பட்டன. இதை சொல்வதற்கு எனக்கு தயக்கமாக இருக்கிறது இருப்பினும் மும்பை போட்டியில் நாங்கள் இதுபோன்ற தவறை செய்யாமல் செய்ய மாட்டோம் என்று பொல்லார்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -