தோல்வியை பற்றி நான் எதுவும் பேசவிரும்பவில்லை. தோல்விக்கு இதுவே முக்கிய காரணம் – பொல்லார்ட் வேதனை

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர்.

Rahul

- Advertisement -

அதன்பின்னர் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. ஆட்டநாயகன் விருது 159 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது.

போட்டி முடிந்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறியதாவது : நாங்கள் பந்து வீசிய போது கடைசி 20 ஓவரை சரியாக வீசவில்லை. அந்த 20 ஓவர்களில் அதிக ரன்களை இந்திய அணி குவித்து விட்டது. இந்த மைதானம் நன்றாக இருந்தது எனவே நாங்கள் இந்த போட்டியில் சேசிங் செய்து விடுவோம் என்று நினைத்தோம்.

rahul 3

ஆனால் பெரிய இலக்கு எவ்வாறு ஒரு வித்தியாசத்தை காண்பிக்கும் என்பதை எங்களுக்கு இந்த போட்டி உணர்த்தியது. இன்னும் 40 முதல் 50 ரன்கள் குறைவாக இருந்திருந்தால் நாங்கள் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். இந்த 50 ரன் வித்தியாசமே எண்களின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக ஆடினார்கள் அவர்கள் கொடுத்த துவக்கம் இறுதியில் அந்த அணி வீரர்கள் ரன்களை குவிக்க முடிந்தது. எங்கள் அணியில் இளம் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாகவே ஆடி வருகிறார்கள்.

Iyer

முன்பு கூறியது போலவே பூரான் இன்று சிறப்பாக ஆடினார். ஒரு இரவில் அனைத்தும் மாறிவிட போவதில்லை நான் மேலும் இது பற்றி பேசப் போவதுமில்லை அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம். இந்த தொடரில் இதுவரை கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே இறுதிப் போட்டியில் அவர் நிச்சயம் பலமாக வருவார் அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று பொல்லார்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement