இந்திய அணிக்கு எதிரான தொடரை இழந்ததால் கொஞ்சம் கூட வருத்தமில்லை. ஓப்பனாக பேசிய பொல்லார்ட் – விவரம் இதோ

Pollard

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 89 ரன்கள், பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும் குவித்தனர்.

Jadeja

அதன்பிறகு 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 39 ரன்களுடனும் தாகூர் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இந்திய அணி வெற்றிபெற வைத்தனர். ஆட்டநாயகனாக கோலியும் தொடர் நாயகனாக ரோஹித்தும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறியதாவது : இந்த போட்டியின் தோல்வியினால் நான் அதிக அளவு ஏமாற்றம் அடையவில்லை. எனது அணி வீரர்கள் குறித்தும், எங்களின் செயல்பாடு குறித்தும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆனால் இந்தியா மீண்டும் நம்பர் ஒன் அணி என்பதை இந்த போட்டியில் காண்பித்து விட்டது.

Pollard

எங்கள் அணியில் நல்ல திறமையான வீரர்கள் இருப்பது இந்த தொடர் எங்களுக்கு உணர்த்தியது. ஹெட்மையர் இரண்டு நல்ல ஆட்டங்களை இந்ததொடரில் வெளிப்படுத்தினார். பூரான் அவரது அதிரடி இந்த தொடரில் காட்டினார். ஹோப் தனது நிலைப்பாட்டையும், காட்ரெல் தனது சிறப்பான பந்துவீச்சை காட்டினார்கள். எனவே இந்த தொடர் என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல தொடராகவே நான் நினைக்கிறேன் என்று பொல்லார்ட் பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -