இவர்கள் இருவரும் இப்படி ஆடினால் நாங்கள் எப்படி ஜெயிப்பது – பொல்லார்ட் வேதனை

Pollard
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் கூறியதாவது : இந்தப் போட்டியில் இருந்து நேர்மறையான விடயங்களையே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். இந்த நாளின் முடிவில் எங்களது செயல்பாடு தோல்வி அடைந்து விட்டது இந்த ரன்களை எட்ட முடியும் என்று நினைத்தோம்.

- Advertisement -

Rohith

ஏனெனில் 2016ஆம் ஆண்டு இதே போன்றே பெரிய இலக்கை நாங்கள் வெற்றிகரமாக சேசிங் செய்தோம். ஆனால் ராகுல் மற்றும் ரோஹித் கொடுத்த துவக்கம் இந்திய அணிக்கு பெரிய வெற்றி வாய்ப்பை அளித்தது. மேலும் அவர்கள் இருவரும் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த தொடரில் தோல்வியுடன் செல்வது வருத்தம் அளிக்கிறது.

இருப்பினும் எங்கள் அணியில் நிறைய வீரர்களின் திறமையை இந்த தொடரில் வெளிப்பட்டது. அடுத்து 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை தர காத்திருக்கிறோம். சென்னையில் துவங்கவிருக்கும் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து எங்களது அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று பொல்லார்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement