ரோஹித் சர்மா இல்லாமல் பொல்லார்டின் தலைமையில் களமிறங்கிய மும்பை அணி – ஏன் தெரியுமா ?

cskvsmi
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கியுள்ளது. இன்றைய முதல் போட்டியில் ஐ.பி.எல் வரலாற்றின் மிகப்பெரிய அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதன்காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியது. சரியாக ஏழு மணிக்கு துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் இந்த போட்டி துவங்கியது.

cskvsmi

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் போடும் நிகழ்வின்போது சென்னை அணியின் கேப்டனாக தோனியும், மும்பை அணியின் கேப்டனாக பொல்லார்டும் மைதானத்திற்குள் நுழைந்தனர். அதன்பின்னர் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் போட மும்பை அணியின் கேப்டனாக பொல்லார்டு வந்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. அதுமட்டுமின்றி மும்பை அணியின் முன்னணி வீரரான ஹார்டிக் பாண்டியாவும் விளையாடவில்லை என்று தற்காலிக கேப்டன் பொல்லார்டு தெரிவித்தார்.

pollard

இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு பிறகு ரோஹித் சர்மா ஏன் விளையாடவில்லை என்பது குறித்து பேசிய அவர் : ரோஹித் தற்போது நன்றாகத்தான் இருக்கிறார். சீக்கிரம் அவர் அணியில் இணைந்து விடுவார் என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக ரோகித் தற்போது விளையாடும் அளவிற்கு முழு உடற்தகுதியுடன் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும் தற்போது இங்கிலாந்து தொடரை முடித்து வந்ததால் சிறிது ஓய்வுக்காக அவர் அமர வைக்கப் பட்டிருக்கலாம் என்றும் அடுத்த போட்டியில் இருந்து ரோகித் நிச்சயம் விளையாடுவார் என்று நம்பலாம்.

Advertisement