அம்பயர் பேச்சை கேட்காத பொல்லார்ட். அபராதம் விதித்த ஐ.சி.சி – இதுதான் நடந்தது

Pollard
- Advertisement -

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து மூன்றாவது டி20 போட்டி இன்று கயானா நகரில் நடக்க உள்ளது.

Ind-vs-Wi

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான பொல்லார்ட்க்கு கடந்த போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக ஐ.சி.சி- யாழ் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாதெனில் இந்திய அணியுடனான 2வது டி20 போட்டியில் விளையாடும் பொழுது அம்பயரின் பேச்சை கேட்காமல் மைதானத்தில் இருந்து வெளியேறினார் என்பதே அந்த குற்றச்சாட்டு.

அதன்படி தனக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அதற்காக நான் வெளியே செல்ல வேண்டும் என்று பொல்லார்ட் அம்பயரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அம்பயர் இந்த ஓவரை முழுவதுமாக நீங்கள் முடித்துவிட்டு அடுத்த ஒரு வெளியே செல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் கருத்தை மதிக்காமல் உடனடியாக மாற்று வீரரை களத்திற்குள் வரவைத்து அவர் வெளியேறியுள்ளார்.

pollard 1

இதன் காரணமாக பொல்லார்ட் மீது அம்பயர்கள் ஐசிசியில் புகார் அளித்தார்கள். அந்த புகாரை ஏற்ற icc பொல்லார்டின் இந்த ஒழுங்கீனமான நடவடிக்கையை கண்டித்து அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிப்பதோடு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement