கோலியின் பிட்னெஸ் சவாலை நிறைவேற்றி வீடியோ வெளியிட்ட மோடி..!

modikholi
- Advertisement -

கடந்த மாதம் மே 23 ஆம் தேதி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்து, அதனை வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அந்த வீடியோவில் விராட் கோலி ,பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோசன் ஆகியோரை ட்விட் செய்திருந்தார்.

Virat-Kohli

அந்த பதிவியில் ‘ நீங்கள் எப்படி உங்கள் உடலை பிட்டாக வைத்திருக்கிறீர்கள் என்று வீடியோ பதிவிடுங்கள்’ என்று அவர்கள் மூவருக்கும் சவால் ஒன்றை விடுத்திருந்தார். இதனைக்கண்ட விராட் கோலி அவரது சவாலை ஏற்று ட்விட்டரில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

அந்த பதிவில் “நான் ரத்தோர் விடுத்த பிட்னஸ் சவாலை ஏற்றுக் கொண்டேன். நான் தற்போது என்னுடைய மனைவி அனுஸ்கா, பிரதமர் மோடி, மற்றும் தோனி ஆகியோருக்கு இந்த சவாலை விடுகிறேன் ” என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, சமீபத்தில் பூங்கா ஒன்றில் யோகா சனம் செய்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

modi

தான் உடற்பயிற்சி செய்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுடன், இந்த சவாலில் ‘ கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, காமன் வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா போன்றவர்களின் பெயர்களை குறிப்பிட்டதோடு, ஐ ஏ எஸ் அதிகாரிகள், அதிலும் குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கும் இந்த சவாலை விடுத்துள்ளார் பிரதமர் மோடி.

Advertisement