ஐபிஎல் தொடரில் விளையாடும் தன்நாட்டு வீரர்களை எச்சரித்த – தெ.ஆ கேப்டன் டீன் எல்கர்

Elgar
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் இந்தாண்டிற்கான (2022) 15 ஆவது சீசன் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அட்டவணையும் விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 2 முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் விளையாடி இந்த தொடரை கோலாகலமாக துவக்க உள்ளன.

ipl

- Advertisement -

இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கத்திற்கு மாறாக 60 போட்டிகளுக்கு பதில் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறும் இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டி வரும் மே 29ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது.

உற்சாகத்துடன் வீரர்கள்:
முன்னதாக இந்த தொடருக்காக நடந்த ஏலத்தில் 204 வீரர்கள் 551 கோடி ரூபாய் செலவில் அனைத்து 10 அணிகளுக்காகவும் விளையாட வாங்கப்பட்டுள்ளார்கள். இந்த வருடம் நடைபெற்ற ஏலத்தில் அதிக பட்சமாக இந்தியாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் இஷன் கிஷன் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்தார்.

rabada

அதுமட்டுமல்லாமல் லியாம் லிவிங்ஸ்டன் போன்ற பல வெளிநாட்டு வீரர்கள் பல கோடி ரூபாய்களுக்கு இந்த ஏலத்தில் விளையாட ஒப்பந்தம் ஆனார்கள். வெறும் 2 மாதங்கள் நடைபெறும் இந்த தொடருக்கு பல கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுவதால் சமீப காலங்களாக நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாட பல வெளிநாட்டு வீரர்களும் ஆர்வத்துடன் காணப்படுகிறார்கள். தற்போது கூட பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு கேட்டுள்ள பட் கம்மின்ஸ், டேவிட் வார்னர் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் தடையின்றி விளையாட உள்ளார்கள்.

- Advertisement -

நாட்டுக்காக அக்கறை இல்லையா:
இருப்பினும் இது பல முன்னாள் வீரர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் இதுபற்றி ஆஸ்திரேலிய வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரின்போது ஆஸ்திரேலியாவை போலவே வங்கதேசத்துக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஒருசில கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆனால் அதில் பங்கேற்காமல் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ககிஸோ ரபாடா போன்ற முக்கிய நட்சத்திர தென்ஆப்பிரிக்க வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டு முன்கூட்டியே விலக முடிவெடுத்துள்ளார்கள்.

Rabada

தென்ஆப்பிரிக்க வீரர்களின் இந்த முடிவுக்கு அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் டீன் எல்கர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுபற்றி பிரபல கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இன்று காலை திடீரென தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எனக்கு போன் வந்தது. அதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேச தொடரில் இருந்து எந்தெந்த வீரர்கள் விலகுகிறார்கள் என்ற விவரத்தை அவர்கள் கேட்டனர். குறிப்பாக முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறார்களா அல்லது டெஸ்ட் தொடரில் விளையாட விரும்புகிறார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது” என கூறினார்.

- Advertisement -

தாய்நாடு முக்கியம் இல்லையா:
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி துவங்கும் நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தொடர் வரும் ஏப்ரல் 12ம் தேதி தான் முடிகிறது. எனவே ஐபிஎல் தொடரில் விளையாட விரும்பும் தென்னாப்பிரிக்க வீரர்களை இந்தியாவுக்கு அனுப்ப அவர்கள் முன்கூட்டியே அனுமதி கேட்டு இருந்ததால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு நிலைமையை பற்றி டீன் எல்கர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் போன்ற ஒரு தொடருக்காக வீரர்களை விடுவது கடினமான செயலாகும்.

Lungi

மேலும் அதில் தான் தங்கள் நாட்டின் மீது அவர்களுக்கு எவ்வளவு விசுவாசம் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் நாட்டுக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தான் இன்று அவர்கள் ஐபிஎல் தொடல் விளையாடுகிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. எனவே அடுத்த வாரம் இதுபற்றி அவர்கள் ஒரு தெளிவை கொடுப்பார்கள் என நம்புகிறேன். ஐபிஎல் தொடரில் விளையாடுவதை விட நாட்டுக்காக விளையாடுவதே மிகப் பெரியதாகும்” என கூறினார்.

இதையும் படிங்க : 90 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அரிதினும் அரிதாக நிகழ்ந்த நிகழ்வு – என்ன தெரியுமா?

அவர் கூறுவது போல சமீப காலங்களாக வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஒரு சில வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐபிஎல் தொடரில் விளையாடுவதை கௌரவமாக நினைக்கிறார்கள். எடுத்துக்காட்டாக ரஞ்சி கோப்பையில் விளையாடி மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வாருங்கள் என ஹர்திக் பாண்டியாவை இந்திய தேர்வு குழு வெளிப்படையாகவே அழைத்தது. ஆனால் அதை கண்டு கொள்ளாத அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக 15 கோடிகளுக்கு கேப்டனாக விளையாட உள்ளார்.

Advertisement