கேட்டது நியாயமே, ரூல்ச மாத்துங்க ! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேசிய டேனியல் வெட்டோரி – எதற்கு தெரியுமா

Vettori
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் தொடர் ஒரு மாதத்தை கடந்து மிகுந்த பரபரப்பான திருப்பங்களுடன் மும்பை நகரில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் கடும் போட்டி போட்டு வருகின்றன. அந்த வகையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 6 வெற்றிகள் 4 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

Nitish Rana 2

- Advertisement -

கடைசியாக கொல்கத்தாவுக்கு எதிராக பங்கேற்ற தனது 10-வது போட்டியில் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறிய அந்த அணி 20 ஓவர்களில் 152/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் ஜோஸ் பட்லர் போன்ற முக்கிய வீரர்கள் கைவிட்ட நிலையில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 54 (49) ரன்களும் சிம்ரோன் ஹெட்மையர் 27* (13) ரன்கள் எடுத்தனர்.

சர்ச்சையான் ஒய்ட்:
அதை தொடர்ந்து 153 என்ற சுலப இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 34 (32) நிதிஷ் ராணா 48* (37) ரிங்கு சிங் 42* (32) போன்ற வீரர்கள் நடுவரிசையில் தேவையான ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர். ஆனால் அப்போட்டியில் 19-வது ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட போது அதை பிரசித் கிருஷ்ணா வீசினார். அதில் முதல் 2 பந்துகளில் தலா 1 ரன் கொடுத்த அவர் 3-வது பந்தை ஒய்ட் போல வீச முயற்சித்த நிலையில் அதை எதிர்கொண்ட பேட்ஸ்மென் ரின்கு சிங் இடப்புறமாக நகர்ந்து அடிக்க முயன்ற போதிலும் ரன்கள் எடுக்க முடியவில்லை.

Wide Umpire RR vs KKR

ஆனால் அதை அம்பயர் ஒயிட் என அறிவித்தது ராஜஸ்தான் வீரர்களும் ரசிகர்களும் அதிர்ச்சியடைய வைத்தது. அதேபோல் மீண்டும் 4 மற்றும் 6 ஆகிய பந்துகளிலும் அதேபோல் பிரசித் கிருஷ்ணா வீசிய நிலையில் மீண்டும் கருணை காட்டாத அம்பயர் அதை ஒயிட் என வழங்கினார். அம்பயரின் அந்த முடிவு கொல்கத்தாவுக்கு சாதகமாக அமைந்த நிலையில் கடுப்பான கேப்டன் சஞ்சு சாம்சன் அதை ரிவியூ செய்யும் வகையில் சைகை காட்டி அம்பயரிடம் நியாயம் கேட்டார். ஆனால் டிஆர்எஸ் முறையில் ஒய்ட்க்கெல்லாம் ரிவ்யூ எடுக்க முடியாது என்பதால் அவரை அம்பயர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாலும் அந்த முடிவு சர்ச்சையாக மாறியது.

- Advertisement -

டேனியல் வெட்டோரி ஆதரவு:
ஏனெனில் அது ஒய்ட் பந்துகளை அடையாளம் காட்டும் கோட்டிற்கு மேலே சென்றது என்பதையும் தாண்டி அதை எதிர்கொள்ள பேட்ஸ்மேன் கிட்டத்தட்ட பந்திற்கு மிக அருகே நகர்ந்த காரணத்தால் அது அடிப்படை விதிமுறைப்படி கண்டிப்பாக ஓய்வு கிடையாது என நிறைய வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதே சமயம் ஒய்ட்கெல்லாம் ரிவ்யூ கிடையாது என்று கேப்டனான உங்களுக்கு தெரியாதா என சஞ்சு சாம்சனையும் ரசிகர்கள் கலாய்த்திருந்தனர்.

vettori

இந்நிலையில் சஞ்சு சாம்சன் அவ்வாறு நடந்து கொண்டதில் எந்த தவறும் இல்லை என்று ஜாம்பவான் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் அம்பயரை கலாய்த்தார். இது போன்ற முக்கிய தருணங்களை களத்தில் இருக்கும் வீரர்கள் முடிவு செய்ய வேண்டும். அப்போட்டியில் கொல்கத்தா வெற்றியை உறுதி செய்து விட்டது என்றாலும் நிறைய முறை அம்பயர்கள் வழங்கும் தவறான முடிவுகள் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மாறுவதை நாம் பார்த்து வருகிறோம்.

- Advertisement -

அதன் காரணமாகத்தான் டிஆர்எஸ் கொண்டுவரப்பட்டது. ஆனால் மீண்டும் குளறுபடி நடைபெறுவதால் அதிலும் மாற்றங்களை (ஒய்ட்டுக்கு ரெவியூ) பார்க்க விரும்புகிறேன். அதுபோன்ற தருணங்களில் அம்பயர்களை விட வீரர்கள் கச்சிதமாக கணிப்பதை நாம் பார்க்கிறோம்” என்று கூறினார்.

ரூல்ச மாத்துங்க:
அதாவது எல்பிடபிள்யூ, கேட்ச், ஸ்டம்பிங் போன்ற பல தருணங்களில் அம்பயரின் முடிவை மறுபரிசீலனை செய்ய டிஆர்எஸ் உள்ளதுபோல ஒய்ட் பந்துகளிலும் அம்பயர்களின் தீர்ப்பு வீரர்களுக்கு திருப்தி அளிக்கவில்லையெனில் அதை ரிவ்யூ செய்யும் வகையில் டிஆர்எஸ் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்தால் அது வரவேற்கத்தக்கது என்று டேனியல் வெட்டோரி கூறுகினார்.

இதையும் படிங்க : வீடியோ : டாப் டயருக்கு பறந்த நடப்பு ஐ.பி.எல் தொடரின் ப்ரம்மாண்ட சிக்சர் – எத்தனை மீட்டர் தெரியுமா?

அந்த சமயத்தில் சஞ்சு சாம்சன் 50% சரியாகவும் அம்பயர் 50% சரியாகவும் முடிவு எடுத்தோம் என நினைத்ததாலேயே அந்த பரபரப்பு ஏற்பட்டது என்று கூறும் டேனியல் வெட்டோரி அமபயர்களும் மனிதர்கள் என்பதால் இதுபோன்ற தருணங்களில் சொதப்பலான முடிவுகளை அம்பயர்கள் எடுப்பது கிரிக்கெட்டில் காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது என்று தெரிவித்தார். மேலும் சஞ்சு சாம்சன் அவ்வாறு நடந்து கொண்டதற்காக அம்பயர் அபராதமும் எதுவும் விதிக்காதது பாராட்டத்தக்கது ஏனெனில் அவர் நியாயத்தை தான் கேட்டார் என்றும் டேனியல் வெட்டோரி கூறியுள்ளார்.

Advertisement