கொரோனாவால் தந்தையை இழந்த இந்திய வீரர். உருக்கமான பதிவை வெளியிட்டு வருத்தம் – விவரம் இதோ

Chawla
Advertisement

இந்திய அணியின் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான பியூஷ் சாவ்லா 2006 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி விளையாடி வருகிறார். தற்போது 32 வயதாகும் சாவ்லா சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடா விட்டாலும் ஐபிஎல் தொடரில் அனுபவ வீரராக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவரது தந்தை கொரோனாவால் பலியானது இன்று ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chawla

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் : என்னுடைய அன்புக்குரிய தந்தை பிரமோத் சாவ்லா இன்று காலை காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டபோதிலும் கொரோனாவுக்குப் பிந்தைய பிரச்சினைகளால் சிரமப்பட்டு வந்த என் தந்தை இன்று காலமாகி உள்ளார்.

- Advertisement -

இந்த கடினமான நேரத்தில் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என் தந்தை ஆத்மா சாந்தியடையட்டும் என உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

32 வயதான எதிராக சாவ்லா 3 டெஸ்ட் போட்டிகள், 25 ஒருநாள் போட்டிகள், 7 டி20 போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் 164 போட்டிகளில் விளையாடி உள்ளார். நேற்று ராஜஸ்தான் அணியின் வீரரான சேத்தன் சக்காரியாவின் தந்தை கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து இன்று சாவ்லாவின் தந்தை கொரோனாவால் உயிரிழந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement