இனி கொல்கத்தா மட்டுமல்ல எல்லா இடத்திலையும் நான் நடத்திக் காட்டுவேன் – கங்குலி அதிரடி திட்டம்

Ganguly-2
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டி தான் இந்திய அணிக்கு முதல் பகல் இரவு போட்டி மற்றும் பிங்க் பாலில் விளையாடிய முதல் போட்டியாகும். இந்த போட்டிக்காக பல்வேறு பணிகளை பிசிசிஐ தலைவர் கங்குலி செய்திருந்தார்.

ind 1

- Advertisement -

அதன்படி இந்த பகலிரவு போட்டியை பிரபலப்படுத்த கொல்கத்தா நகர் முழுவதும் ஏகப்பட்ட விளம்பரங்கள் மற்றும் போட்டியை நேரில் காண இந்திய முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களை அழைத்தது அதுமட்டுமின்றி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி என முக்கியத் தலைவர்கள் என அனைவரையும் அழைத்தது என பல்வேறு விடயங்களை செய்தார்.

அதுமட்டுமின்றி கிரிக்கெட் துறையைத் தவிர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பிவி சிந்து போன்றோரையும் அழைத்து இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தார். இந்த போட்டி திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்றது இந்த மூன்று நாட்கள் மட்டுமே நடந்த நிலையில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Pink-ball

இந்நிலையில் இனிவரும் டெஸ்ட் போட்டிகளில் இதுபோன்ற மக்கள் கூட்டத்துக்கு இடையே ஆரவாரமாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார். எனவே இனி கொல்கத்தாவில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மைதானங்களிலும் இதுபோன்ற பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அதனை தான் மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்காக வேலை செய்யப் போவதாக கங்குலி அறிவித்துள்ளார்.

Advertisement