பிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் விக்கெட்டில் நடந்த அதிசயம் என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Ishanth-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று சரியாக 1 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புடன் துவங்கிய இந்த முதல் பிங்க் பால் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டே ஒரு சாதனையுடன் நிகழ்ந்துள்ளது. அதன்படி ஏழாவது ஓவரை வீசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மூன்றாவது பந்தில் 4 ரன்கள் எடுத்திருந்த இம்ரான் கைசை எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழக்கச் செய்தார்.

இதில் என்ன சிறப்பு என்றால் அம்பயர் விக்கெட் கொடுத்தும் அதனை ஏற்க மறுத்த பேட்ஸ்மேன் ரிவியூ செய்தார். உடனே மூன்றாவது அம்பயர் அதனை சோதித்துப் பார்க்க பந்து ஸ்டம்பில் லைனில் சென்று ஸ்டம்பை அடித்ததால் விக்கெட் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் பிங்க்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றி இஷாந்த் சர்மா சாதனை படைத்தார்.

அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறது. இதுவரை 22 ஓவர்களை வீசி உள்ள இந்திய அணி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது பங்களாதேஷ் அணி தற்போது 73 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Advertisement