பிங்க் நிற பந்துகளை பயன்படுத்தினால் இந்த முடிவு நிச்சயம் கிடைக்குமாம் – சுவாரசிய தகவல்

ricket-ball
- Advertisement -

பங்களாதேஷ் அணி தற்போது இந்தியாவில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வந்தடைந்துள்ளது. இந்த இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பகலிரவு போட்டியாக கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ground

- Advertisement -

இந்நிலையில் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயன்படுத்தப்படும் 72 பிங்க் நிற பந்துகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. மற்ற நாடுகள் கூகுபுரா நிறுவனத்தின் பந்துகளை பயன்படுத்தும் வேளையில் இந்திய நிர்வாகம் SG நிறுவனத்தை நாடியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு பிங்க் நிற பந்துகளை தயாரிக்க போதிய அனுபவம் இல்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சிவப்பு நிற பந்துகளை விட பிங்க் நிற பந்துகளில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் அதிகமாக கிடைக்கும். மேலும் இந்த பந்து பல மணி நேரம் தனது தன்மையை இழக்காமல் புதியபந்து போன்ற ஸ்விங் ஆகும் கூடுதல் வேகமும் கிடைக்கும். சுழற்பந்துவீச்சாளர்கள் இந்தப் பந்தை வைத்து அதிக அளவில் சுழற்ற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிங்க் நிற பந்துகளில் பேட்ஸ்மேன்களுக்கு அதிகளவு கைகொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் பிங்க் நிற பந்துகளை பயன்படுத்தி இதுவரை 11 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த பதினோரு டெஸ்ட் போட்டிகளுக்கும் முடிவு கிடைத்துள்ளது வெற்றியோ தோல்வியோ ஏதாவது ஒரு முடிவு கண்டிப்பாக இந்த பந்துகளை பயன்படுத்தினால் கிடைக்குமாம். எனவே கொல்கத்தா போட்டியில் இந்திய அணிக்கு சர்ப்ரைசான சவால் காத்திருக்கிறது.

Advertisement