நிரம்பி வழிய இருக்கும் ஈடன்கார்டன். ஹெலிகாப்டரில் வரும் பிங்க் பந்து. மணி அடிக்கப்போகும் தலைவர்கள் – கங்குலி கலக்கல்

Pink-ball
- Advertisement -

இந்திய அணி வங்கதேச அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வரும் 22ஆம் தேதி மோத இருக்கிறது. இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்காக கடுமையான முயற்சிகளை எடுத்த கங்குலி பல திட்டங்களுடன் இந்த போட்டிக்காக காத்திருக்கிறார்.

Ground

- Advertisement -

இந்த போட்டியின் சிறப்பம்சம் யாதெனில் வரலாற்றில் இந்திய அணி பங்குபெறும் முதல் பகலிரவு போட்டியாக இது அமையவுள்ளது. மேலும் பிங்க் பந்தை பயன்படுத்தி இந்திய அணியில் விளையாட உள்ள முதல் போட்டியும் இதுவாகும். எனவே இது வரலாற்றில் ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான முதல் மூன்று நாட்கள் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாகவும் மைதானம் நிரம்பி வழிய காத்திருப்பதாகவும் தெரிகிறது.

ஆன்லைனிலும் ரசிகர்கள் இந்த போட்டிக்கான டிக்கெட்டை வாங்க அதிகளவு ஆர்வம் காட்டினர். இந்நிலையில் இந்த போட்டி துவங்கும் போது அந்த போட்டிக்காக பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்துகள் துணை ராணுவத்தினரின் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம் கீழே இறங்கி இரண்டு அணி கேப்டன்களுக்கும் அளிக்கும் படியான நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும் திட்டமிட்டபடி நிச்சயம் இந்த நிகழ்வு நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ind 1

மேலும் பேண்ட் வாத்தியங்களுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து இந்த போட்டியை காண வரும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஈடன் கார்டன் பெல்லை அடித்து போட்டியை துவக்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே இந்த டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான கங்குலி திட்டமிட்டு செயல்படுத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப்போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Advertisement