ரொம்ப என்ஜாய் பண்ணாதீங்க. உண்மையான சவால் இந்த அணிக்கு எதிராக காத்திருக்கிறது – பீட்டர்சன் எச்சரிக்கை

Pieterson-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை அவர்களிடம் இழந்தாலும் சிறப்பாக விளையாடி டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. டி20 தொடரை விட டெஸ்ட் தொடரை இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.

IND-1

- Advertisement -

இதனால் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை விமர்சனம் செய்தனர். ஆனால் இந்திய அணி வெறித்தனமான கம்பேக் கொடுத்து 2 – 1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் என அனைவரும் மாபெரும் அளவில் கொண்டாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது.

INDvsENG

இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி அகமதாபாத் மைதானத்திலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ம் தேதி புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது முதலில் நடைபெறயிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுயிருக்கிறது. இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது.

pant

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் இந்திய அணி குறித்து ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அதில் “ பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வென்ற பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை இந்திய அணி அதிகமாக கொண்டாடி வருகிறது. உண்மையான அணி (இங்கிலாந்து) இன்னும் 2 வாரங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யப்போகிறது. அப்போது இந்திய அணியை இந்திய மண்ணில் தோற்கடிக்கும் அந்த அணி. எனவே அதிகமாக கொண்டாடாமல் போட்டிக்காக தயாராகுங்கள்” என்று ட்விட் செய்திருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement