டெஸ்ட் பைனலை சவுதாம்ப்டனுக்கு பதிலாக அந்த நாட்டுல நடத்தி இருக்கனும் – பீட்டர்சன் கருத்து

Pietersen
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்து இருந்தது போல கடந்த 18ஆம் தேதி இந்த இறுதிப் போட்டியானது துவங்கியது. ஆனால் இந்த போட்டி துவங்கிய முதல் நாளும் சரி, இன்றைய நான்காவது நாளும் சரி மழையின் காரணமாக முழுவதும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

WTC

- Advertisement -

நாளை 5 ஆவது நாளை தொடர்ந்து ரிசர்வ் டே ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் வெற்றியாளர்கள் என யாரும் இருக்கமாட்டார்கள். இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஏனெனில் மிகப்பெரிய தொடராக நடந்த இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த முக்கியமான போட்டியை தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஐசிசி சவுத்தாம்ப்டன் நகரை தேர்வு செய்தது தவறு என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இட்ட பதிவில் :

இதை சொல்வதற்கு எனக்கு வேதனையாக உள்ளது. நம்பமுடியாத முக்கியமான போட்டி இங்கிலாந்தில் நடத்தி இருக்க கூடாது என்னை பொருத்தவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஒரு முக்கியமான போட்டி இதனை துபாயில் நடத்தியிருக்க வேண்டும்.

பொதுவான இடம், நட்சத்திர மைதானம், நல்ல சீதோஷண நிலை, பயிற்சி வசதிகள், விமானம் மையம், ஐசிசி தலைமையகம் என அனைத்தும் அங்கு உள்ளது என அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement