உங்களுக்கு எல்லாம் பீல்டரே வேணாம். எங்க தலையே பாத்துக்குவாரு – பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த சி.எஸ்.கே

kevin
- Advertisement -

தோனியும் தானும் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்து தோனியை கிண்டல் செய்த கெவின் பீட்டர்சனுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். கரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

pietersen

- Advertisement -

இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். இதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பல வீரர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தோனியை கலாய்ப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதில் 2008ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ”தோனி நீங்கள் ஏன் எனக்காக அந்த இடத்தில் ஒரு பீல்டரை நிறுத்தக் கூடாது. ஏனெனில் உங்களுக்கு எதிராக ரன் அடிப்பது மிக எளிதாக இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் எதிர் வினையாற்றி வந்தனர். இதனை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சில நேரங்களில் உங்களை போன்ற வீரர்களை விக்கெட் எடுக்க பில்டர்கள் தேவையில்லை என்று நச்சென்று பதிவு செய்தது. அந்த புகைப்படத்தில் தோனி கெவின் பீட்டர்சன் செய்வது போல் இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் தோனிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சி.எஸ்.கே பதிலளித்துள்ள அந்த புகைப்படத்தில் பீட்டர்சன் ஸ்டம்பிங் ஆவது போன்றும் உங்களுக்கு பீல்டர் தேவையில்லை என்றும் இப்படியும் உங்களை ஆட்டமிழக்க வைக்கலாம் என்று சுளீர் என பதிலளித்துள்ளது. தோனி இதுபோன்று ஸ்டம்பிங் செய்வது ஒன்றும் புதிது கிடையாது. உலகின் பல்வேறு தலைசிறந்த பேட்ஸ்மேன்களை தோனி ஸ்டம்பிங் செய்துள்ளது குறிப்டத்தக்கது.

அதுமட்டுமின்றி தோனி மிகவிரைவாக ஸ்டம்பிங் செய்த சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். அவரின் ஸ்டம்பிங் வீடியோ பல இணையத்தில் அடிக்கடி வைரலாவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement