விளம்பர பலகையில் விழுந்தார்..! நெஞ்சில் பலத்த காயம்..! – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..! – யார் தெரியுமா..?

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் குசால் பெரேரா பலத்த காயமடைந்துள்ளார். இலங்கை அணி மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக கடந்த மே 30 ஆம் தேதி மேற்கிந்திய நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. இந்த தொடரின் முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் இரண்டவது போட்டியில் மேற்கிந்திய அணி 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
kusal
இந்நிலையில் இந்த தொடரின் கடைசி மற்றும் இருந்து ஆட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி தொடங்கியது. பார்படாஸில் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இந்த போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவின்படி இலங்கை அணி இன்னும் 63 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நாளை களமிறங்க உள்ளது.

இந்நிலையில் இன்று(ஜூன் 26) வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேப்ரியல், இலங்கை அணியின் தில்ரூவான் பெரேரா வீசிய பந்தை தூக்கி அடித்தார். அந்த பந்தை பீல்டிங் செய்துகொண்டிருந்த குசால் பெரேரா பிடிக்க ஓடினார் ஆனால், பந்து பவுண்டரி கோட்டிற்கு தாண்டிச் சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக விளம்பர பலகை மீது பயங்கரமாக மோதியதில் அவருக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டது.
perara
அதன் பின்னர் அவர் அங்கேயே வலியால் நெஞ்சை பிடித்துக்கொண்டு உதவி கேட்டுள்ளார். இதனால் பதறி போன இலங்கை அணி வீரர்கள் ஓடி சென்று அவருக்கு என்ன ஆனது என்று பார்த்தனர். பின்னர் அவருக்கு காயம் பலமாக பட்டுள்ளதை அறிந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement