நம்ப முடியாது சீட்டுல எழுதி கொடுங்க.. செலவை அவங்க பாத்துக்கட்டும்.. இந்தியாவுக்கு பாக் வாரியம் எச்சரிக்கை

PAK vs IND
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இம்முறை 1996க்குப்பின் முதல் முறையாக பாகிஸ்தானில் ஒரு ஐசிசி தொடர் நடைபெறுகிறது. அதனால் அந்தத் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கான வேலைகளை பாகிஸ்தான் வாரியம் துவங்கியுள்ளது. ஆனால் அத்தொடரில் விளையாட மாட்டோம் என்று இந்தியா இப்போதே அடம் பிடிக்க துவங்கியுள்ளது.

ஏனெனில் எல்லைப் பிரச்சினை காரணமாக 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு செல்வதை இந்தியா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. அத்துடன் 2012க்குப்பின் இருதரப்பு தொடர்களில் மோதுவதையும் நிறுத்தியுள்ள இந்தியா ஐசிசி மற்றும் ஆசிய தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது.

- Advertisement -

எச்சரிக்கும் பாகிஸ்தான்:
இருப்பினும் அங்கே சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றியும் கண்டது. அதனால் இம்முறையும் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாட விரும்பாத பிசிசிஐ தங்களுடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் அந்த செய்தியை அறிந்த பாகிஸ்தான் வாரியம் அதிருப்தியடைந்துள்ளது.

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அரசு அனுமதியில்லாமல் விளையாட முடியாது என்று பிசிசிஐ வாயில் சொல்வதை நம்ப முடியாது என பாகிஸ்தான் வாரியம் கருதுகிறது. எனவே அந்த அதிகாரப்பூர்வ செய்தியை ஐசிசி நிர்வாகத்திடம் பிசிசிஐ தாளில் எழுதிக்கொடுக்க வேண்டுமென பாகிஸ்தான் வாரியம் எச்சரித்துள்ளது. அத்துடன் இலங்கை அல்லது துபாயில் இந்தியா விளையாடினால் அதற்கான செலவை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஐசிசிக்கும் பாகிஸ்தான் வாரியம் செக் வைத்துள்ளது.

- Advertisement -

இது பற்றி பிடிஐ இணையத்தில் பெயர் வெளியிட விரும்பாத பாகிஸ்தான் வாரிய நிர்வாகி பேசியது பின்வருமாறு. “ஒருவேளை எங்கள் நாட்டுக்கு வந்து விளையாட இந்திய அரசு அனுமதி மறுத்தால் அது எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும். அந்த கடிதத்தை பிசிசிஐ இப்போதே ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும். உண்மையில் இத்தொடரில் விளையாடுவதற்கான உங்களுடைய பயணத் திட்டங்கள் பற்றிய தகவல்களை ஐசிசி’யிடம் 6 மாதத்திற்கு முன்பே சமர்ப்பிக்குமாறு பிசிசிஐயிடம் நாங்கள் சொல்லி விட்டோம்”

இதையும் படிங்க: ரோஹித்துக்கு பின் இந்தியாவின் டி20 கேப்டனாக அந்த 2 பேர் ரெடியா இருகாங்க.. சபா கரீம் வெளிப்படை

“அதே சமயம் பாகிஸ்தானுக்கு வெளியே போட்டிகள் நடைபெற்றால் அதற்கான எக்ஸ்ட்ரா செலவை ஐசிசி நிர்வாகம் கொடுக்க வேண்டும். அது போன்ற சூழ்நிலை வருங்காலத்தில் எழுந்தால் அதை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். இதனால் இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருநாட்டு ரசிகர்களிடமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement