இந்திய வீரர்களை தாக்கப்போகும் பயங்கரவாதிகள். பாகிஸ்தான் அறிவிப்பால் பதறும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ

india
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

Iyer-2

- Advertisement -

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் இருக்கும் இந்திய அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக தகவல் ஒன்றினை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாவது : எங்களுக்கு பெயர் குறிப்பிடப்படாத ஒரு பயங்கரவாத இயக்கத்தில் இருந்து இந்திய அணியை தாக்கப் போவதாக ஒரு மெயில் வந்தது.

அந்த மெயிலினை நாங்கள் ஏற்கனவே ஐ.சி.சி யிடம் பகிர்ந்து விவரத்தினை தெரியப்படுத்தி விட்டோம் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஐசிசி அந்த மெயிலை பிசிசிஐக்கு பகிர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பிசிசிஐ செயல் தலைமை அதிகாரி ராகுல் ஜோரி கூறியதாவது :

kohli

இந்த தாக்குதல் சம்பவம் பற்றி வந்த மெயில் உண்மைதான் இது குறித்து உள்துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம். மேலும் மும்பை போலீசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். அதுமட்டுமின்றி ஆண்டிகுவாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement