7 முறை இவர் தவறு செய்தார். அதாலே அந்த போட்டியில் தோற்றோம் – நினைவலைகளை பகிர்ந்த பதான்

pathan 1
- Advertisement -

கொரனோ வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக தற்போது ஓய்வில் இருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைதளம் மூலம் தங்களது கருத்துக்களையும், அனுபவத்தையும் பகிர்ந்து வரும் வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் 2008 ஆம் ஆண்டு தான் பங்கேற்ற டெஸ்ட் தொடர் குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

Pathan-1

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கும்ப்ளே தலைமையில் 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அப்போது சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும் அம்பயர் ஸ்டீவ் பக்னர் பல தவறான முடிவுகளை கொடுத்தார். அந்த முடிவுகளின் மூலம் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

மேலும் அவர் செய்த அந்த சில தவறுகள் இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தன. அந்த டெஸ்ட் போட்டியில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது குறித்து அண்மையில் பேட்டியளித்த பக்னர் இதுபோன்ற தவறுகள் நடப்பது சகஜம்தான் என அந்த தவறுகளை ஒப்புக் கொண்டார். இந்நிலையில் அந்த தொடர் குறித்து பேசிய பதான் கூறுகையில் :

Bucknor 2

முன்பு செய்த தவறை இப்போது ஒப்புக் கொள்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. அப்போது நாங்கள் அந்த போட்டியில் தோற்று விட்டோம். அவர் செய்த தவறை யாராலும் மாற்ற முடியாது 2003 ஆம் ஆண்டு நான் முதல் முறையாக ஆஸ்திரேலியா சென்ற போது முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அந்த போட்டியில் இந்திய அணி 21 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றது.

- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு போட்டியை வெல்வது என்பது எளிதான விடயம் கிடையாது. ஆனால் அம்பயர் செய்த தவறால் மற்றொரு போட்டியை நாங்கள் இழந்தது ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கூறினார். மேலும் பேசிய பதான் கூறுகையில் : சில நேரங்களில் மோசமான வானிலை, பேட்டிங், பவுலிங் ஆகியவற்றால் போட்டியில் தோற்பது வழக்கம்.

Bucknor

ஆனால் அம்பயரால் தோற்பது என்பது வீரர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். அந்த போட்டியில் மட்டும் ஏழுமுறை தவறான தீர்ப்பை அவர் கொடுத்துள்ளார். இதனாலேயே நாங்கள் போட்டியில் தோற்றோம். மேலும் சைமன்ஸ்க்கு மட்டும் மூன்று முறை அவர் நாட்அவுட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது என்றும் பதான் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement