கொரோனா தீவிரம். கம்பீருக்கு அடுத்து தங்களது உதவியை அறிவித்த பதான் சகோதரர்கள் – விவரம் இதோ

yusuf

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சென்றவாரம் 40 என்று இருந்த எண்ணிக்கை தற்போது 500ஐ தாண்டிவிட்டது. 13 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கிட்டத்தட்ட 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3000க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர்.

Corona-1

இப்படிப் பார்த்தால் அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் கரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மருத்துவ நிபுணர்களும் பிரபலங்களும் கரோனாவின் பாதிப்பை வீடியோ மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதனை தாண்டி தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே இந்த வைரசுக்கு எதிராக போராட முடியும் என்ற விழிப்புணர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் பீதியில் இருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக இர்பான் பதான் மற்றும் யூசப் பதான் ஆகிய சகோதரர்கள் 4000 முக கவசங்கள் நன்கொடையாக வழங்குகின்றனர் .

corona

இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர். நாங்கள் மேலும் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம். ஆனால், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதுதான் நாம் மனித குலத்திற்கு செய்யும் மிகப்பெரிய உதவி என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர் 50 லட்சம் நன்கொடை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலரும் பல வழிகளில் அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

corona 1

இருப்பினும் மக்கள் இதுகுறித்த முழுத்தெளிவு இல்லாமல் வெளியில் சுற்றத்தான் செய்கின்றனர். மேலும் இவ்வாறு செய்யக்கூடாது என்றும் அவ்வாறு தொடர்ந்து நடக்குமாயின் விளைவு பெரிய அளவில் ஏற்படும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.