இந்த தொடரில் இந்திய வீரரான இவரின் விக்கெட்டை வீழ்த்துவதே என் இலக்கு – பேட் கம்மின்ஸ் அதிரடி பேட்டி

சிட்னி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நவம்பர் 27ஆம் தேதி ஒருநாள் தொடர் துவங்க இருக்கிறது. அதன் பின்னர் டிசம்பர் மாதம் டி20 வரும் ஜனவரி மாதம் வரை டெஸ்ட் தொடரும் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணியினர் சிட்னி நகரில் பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஒருநாள் மற்றும் டி20 ஆகிய தொடர்கள் முடிவடைந்த பின்னர் முதல் டெஸ்ட் போட்டியுடன் விராட் கோலி கிளம்பிவிடுவார்.

INDvsAUS

அதாவது, அவருக்கு முதல் குழந்தை பிறக்கப்போகிறது. டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு இந்தியா திரும்பிவிடுவார் விராட்கோலி. இதை இந்தியாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்நிலையில் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ்.

இதுகுறித்து அவர் கூறுகையில்… ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித், பாபர் அசாம் போன்ற வீரர்கள் ஒவ்வொரு அணியிலும் இருப்பார்கள். அவர்களை விட மிகச்சிறந்த வீரர் விராட் கோலி. ஒவ்வொரு அணியில் இருக்கும் மிகச் சிறந்த வீரர்களை விக்கெட் எடுப்பது தான் எனக்கு மகிழ்ச்சி.

Kohli 4

அவரது விக்கெட்டை வீழ்த்துவது மூலம் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறலாம். அவரது விக்கெட்டை தான் எனக்கும் வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் பேட் கம்மின்ஸ். இவர் பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

PatCummins

ஏனெனில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவர் பெயர் இடம் பெற்றிருந்தாலும் ஐபிஎல் தொடரில் நீண்டகாலம் விளையாடியது, மற்றும் தனிமைப்படுத்தலில் ஏற்பட்ட மனச் சோர்வு ஆகியவற்றின் மூலம் ஏற்பட்ட தாக்கத்தால் விளையாடுவது சந்தேகம் என்று கூறியிருந்தார் பேட் கம்மின்ஸ்.