கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் இதுதான்.. ஆனாலும் எங்களுக்கு சேன்ஸ் இருக்கு – பேட் கம்மின்ஸ் பேட்டி

Cummins
- Advertisement -

அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபயர் போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது கொல்கத்தா அணியிடம் தோல்வியை சந்தித்து இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாட வேண்டிய கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் வெற்றி இலக்கினை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணி துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 164 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : உண்மையிலேயே எங்களுடைய முயற்சியை நாங்கள் இந்த போட்டியில் கொடுத்தோம். ஆனால் இறுதியில் தோல்வியை சந்தித்ததில் வருத்தம் தான்.

- Advertisement -

இருந்தாலும் இரண்டாவது குவாலிபயர் போட்டி எங்களுக்கு இருக்கிறது. அதில் வெற்றி பெற்றால் நிச்சயம் இறுதி போட்டிக்கும் முன்னேறுவோம். டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு மோசமான நாள் கண்டிப்பாக எந்த அணிக்குமே இருக்கும். அந்த வகையில் இன்றைய போட்டியில் எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது.

இதையும் படிங்க : ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நாங்க முன்னேற காரணம் அவங்கதான் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

பேட்டிங்கில் நாங்கள் இப்படி தடுமாறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இதிலிருந்து நிச்சயம் மீண்டு வர முடியும். கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்தார்கள். சென்னை மைதானத்தில் எங்களால் சிறப்பாக விளையாட முடியும் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement