- Advertisement -
உலக கிரிக்கெட்

சர்வதேச வீரர்களிடையே தேசப்பற்று குறைய அவங்க தான் காரணம், இந்தியாவை தாக்கிய ஆஸி கேப்டன் – காரணம் என்ன?

ஐசிசி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தின் லண்டனில் இருக்கும் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த போட்டியில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன. இருப்பினும் இப்போட்டி பொதுவான இடமான இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவதால் அங்குள்ள கால சூழ்நிலைகளுக்கேற்ப சில பயிற்சி போட்டிகளில் விளையாடி முழுமையாக தயாராமல் இரு அணிகளும் நேரடியாக ஃபைனலில் களமிறங்குவது இரு நாடுகளைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தான் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனெனில் மே 28 வரை நடைபெற்ற அந்த தொடரில் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பல்வேறு அணிகளில் இடம் பிடித்திருந்ததால் அதை முடித்து விட்டு தான் இங்கிலாந்துக்கு புறப்படும் நிலை ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த 2008இல் இளம் வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் 8 அணிகளுடன் துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல பரிணாமங்களை கடந்து இன்று விஸ்வரூப வளர்ச்சி கண்டு சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக மாறியுள்ளது.

- Advertisement -

கமின்ஸ் அதிருப்தி:
குறிப்பாக 2021 வரை 8 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தற்போது 10 அணிகள் 74 போட்டிகளில் விளையாடும் தொடராக மாறி வரும் காலங்களில் 84, 94 போட்டிகள் கொண்ட தொடராக மேலும் விரிவடைய உள்ளது. அதனால் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை குறைவதுடன் நெருக்கமான அட்டவணைகளால் அதிகமாக விளையாடுவது வீரர்களிடம் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது. அது போக சர்வதேச அளவில் ஒரு வருடம் விளையாடினாலும் கிடைக்காத பல கோடி ரூபாய்கள் ஐபிஎல் தொடரில் 2 மாதம் விளையாடுவதற்கு கொடுக்கப்படுகிறது.

அதனால் ட்ரெண்ட் போல்ட், ஜேசன் ராய் போன்ற வீரர்கள் இப்போதெல்லாம் நாட்டை விட ஐபிஎல் போன்ற டி20 தொடர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்தே வெளியேறி விட்டார்கள். இந்நிலையில் தேசப்பற்றையும் நாட்டுக்காக விளையாடும் நேரத்திலும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இது பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது நீண்ட நாட்களைக் கடந்து தற்போது இங்கு வந்துள்ளது. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த காலத்தை போல வீரர்களுக்கு தங்கள் நாட்டுக்கு விளையாடும் நேரத்தின் மீது ஏகபோக உரிமை கிடைப்பதில்லை. ஐபிஎல் ஒரு தசாபத்திற்கு முன்பே அதை மாற்றி விட்டது. தற்போது அது மேலும் மேலும் உள்ளடக்கமாக ஊடுருவி வருகிறது. எனவே எங்களைப் போன்ற வீரர்கள் அதைப் பற்றி முனைப்புடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதை மிகவும் ஸ்பெஷலாக வைத்திருக்க விரும்புகிறோம்”

“குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்காக ஒவ்வொரு வீரரும் தங்களுடைய உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்த விரும்புகிறோம். அது மிகவும் சவாலானது. இவை அனைத்தும் நாம் எவ்வாறு ஆழமாக சிந்திக்கிறோம் என்பதை பொறுத்தது. ஏனெனில் அடுத்த சில வருடங்களில் 12 மாத சர்வதேச கிரிக்கெட்டின் காலண்டர் என்பது இன்னும் வித்தியாசமாக இருக்கும். சில டி20 அணிகள் வழங்கும் வாய்ப்புகள் அதிகமாக பேசப்படும். அதற்காக நீங்கள் வீரர்களை குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க:ENG vs IRE : 3 நாளில் அயர்லாந்தை முடித்த இங்கிலாந்து – 145 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் தனித்துவ சாதனை

“ஒருநாள் டி20 அணிகள் அனுமதி கொடுக்கும் நாள் வரும் என்பதே நிதர்சனமாகும். மற்ற விளையாட்டில் நீங்கள் ஏற்கனவே அதை பார்த்து வருகிறீர்கள். எனவே நாம் ஆஸ்திரேலியாவுக்கு விளையாடுவதை ஸ்பெஷலாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக சிறந்த வீரர்கள் எங்களுக்கு உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் வெற்றியை பெற்றுக் கொடுப்பதை விரும்புகிறோம். எப்படியிருந்தாலும் தற்போதைய நிலைமை கால்பந்தாட்டத்தைப் போல் மாறி வருகிறது. அதில் நீங்கள் விளையாடும் போது நாட்டுக்காக விளையாடுவதற்கு அந்த கிளப் அணியிடம் அனுமதி வாங்க வேண்டிய நாள் விரைவில் வரும்” என்று கூறினார்.

- Advertisement -
Published by