பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், தரமான ஆட்டத்தை விளையாடி விட்டார் – பேட் கம்மின்ஸ் பேட்டி

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக இந்திய அணியின் முன்னணி வீரர்களான கோலி, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இல்லாமல் இரண்டாவது போட்டியில் இந்திய அணி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற அச்சம் அனைவரிடமும் இருந்தது. மேலும் முன்னாள் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் என இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வி வரும் என்றும் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் அவர்களின் கருத்துகளை பொய்யாக்கும் வகையில் ரகானே தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியை அபாரமாக கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விராட் கோலிக்கு பதிலாக ஜடேஜாவும், காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக சிராஜ் விளையாடினர். அதேபோன்று முதல் போட்டியில் ஏகத்துக்கும் சொதப்பிய ப்ரித்வி ஷாவிற்கு பதிலாக சுப்மன் கில் ஆகியோர் விளையாடினர். இதில் குறிப்பாக அறிமுக வீரர்களாக விளையாடிய சிராஜ் மற்றும் கில் ஆகியோரது ஆட்டம் அசத்தலாக இருந்தது.

- Advertisement -

பந்துவீச்சில் சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்த பேட்டிங்கில் ஒருபக்கம் கில் முதல் இன்னிங்சில் 45 ரன்கள், இரண்டாவது இன்னிங்சில் 35 ரன்கள் என அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக அறிமுக வீரர்களான இவர்கள் இருவரது ஆட்டம் அமைந்தது என்று வெளிப்படையாகவே இந்திய அணியின் கேப்டன் ரஹானே பாராட்டி இருந்த நிலையில் தற்போது இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறுகையில் :

Gill 2

சுப்மன் கில் தனது முதல் போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். களத்தில் எப்போதும் அமைதியாகவே இருக்கும் குணம் படைத்த அவர் பேட்டிங்கின்போது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் நாங்கள் சற்று மோசமான பந்து வீசும் வரை அவர் காத்திருந்து பொறுமையாக விளையாடினார். அதேபோன்று அவரது ஆட்டம் சற்று அதிரடியாக இருந்தது என்று தெரிவித்தார். முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் அடுத்த போட்டியில் தீவிர முயற்சி பெற்று வெற்றிபெறவே அனைத்து அணிகளும் முயற்சிக்கும்.

Gill

அதைத்தான் இந்திய அணியும் செய்து இருக்கிறது, இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் இரண்டாவது இன்னிங்சில் சொதப்பியதாக கருதுகிறோம். அதன் காரணமாகவே எங்களுக்கு இந்த தோல்வி உண்டானது. இனி வரும் போட்டிகளில் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என்றும் நிச்சயம் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement