கோலிக்கு எதிராக பந்துவீசுவதில் எனக்கு துளியும் பயமில்லை. போட்டிக்காக காத்திருக்கிறேன் – ஆஸி வீரர் சவால்

Kohli-1
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 கணக்கில் தொடரை கைப்பற்றியது. டி20 தொடரில் இந்திய அணியும் 2-1 கணக்கில் தொடரை கைப்பற்றியது. மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி வருகின்ற டிசம்பர் 17 முதல் 21 வரை அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

INDvsAUS

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புவதாக கூறியுள்ளார். மனைவியின் கர்ப்பகாலத்தில் அவருடன் இருப்பதற்கு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார் விராட். இதனால் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிக்கு யார் கேப்டன் ? என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் தற்போது காயம் காரணமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி பங்கேற்கும் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியை முன்னிலை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் “நான் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பந்துவீச போவதில்லை என்பதில் மகிழ்ச்சி. ஆனால் நான் விராட் கோலியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

அந்த சமயத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். கடந்த வாரத்தில் இரட்டை சதம் விளாசிய கேன் வில்லியம்சனுக்கும் பந்துவீசவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.விராட் கோலி போன்றவர்களும் அற்புதமாக செயல்பட்டு தனது அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல விரும்புவர். ஆனால் அந்த விக்கெட்டை வீழ்த்துவதன் மூலம் மகிழ்ச்சி அடைவேன்.

PatCummins

விராட் கோலியை களத்தில் சந்திக்க எனக்கு எவ்விதமான பதற்றமும் கிடையாது, அந்த சமயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். பிரைன் லாராவுக்கு கிளன் மெக்ராத் சிறப்பாக பந்து வீசுவதை பார்த்திருப்போம். இவர்கள் இருவருக்கிடையே கடுமையான போட்டிகள் நடைபெறும். இதைதான் நானும் விரும்புகிறேன். எனவே முதல் டெஸ்ட் போட்டியில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறியுள்ளார் பாட் கம்மின்ஸ்.

Advertisement