தடுமாறிய போது பும்ராவை பார்த்து ஒரே நாளில் கற்றுக்கொண்டேன் – நட்சத்திர வெளிநாட்டு வீரர் ஓப்பன்டாக்

MI Jaspirt Bumrah
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமாக மும்பை நகரில் நடைபெற்று வரும் நிலையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பைக்கு மட்டும் தோல்வி முகமாக அமைந்து வருகிறது. ஏற்கனவே முதல் 8 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்து மோசமான சாதனை படைத்த அந்த அணி அதன்பின் 2 வெற்றிகளை பெற்று ஆறுதலடைந்தது. ஆனாலும் கொல்கத்தாவுக்கு எதிரான 11-வது போட்டியில் மீண்டும் பரிதாபமாக தோற்ற அந்த அணி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சீசனில் 9 தோல்விகளை பதிவு செய்து மீண்டும் மோசமான சாதனை படைத்துள்ளது.

ROhit Sharma MI vs KKR

- Advertisement -

நவிமும்பையில் உள்ள டிஒய் பாட்டில் மைதானத்தில் மே 9-ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் தலா 43 ரன்களை அதிரடியாக அடித்ததால் ஒரு கட்டத்தில் அந்த அணி 136/3 என்ற நல்ல நிலைமையில் இருந்தது. ஆனால் அப்போது தீயாக பந்துவீசிய நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா அடுத்த 9 பந்துகளில் 5 விக்கெட்டுக்கள் எடுத்ததால் 180 ரன்களை தொடவேண்டிய கொல்கத்தா 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

திரும்பிய கமின்ஸ்:
இருப்பினும் 166 என்ற நல்ல இலக்கை துரத்திய மும்பைக்கு கேப்டன் ரோகித் சர்மா உள்பட அனைத்து வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டான அந்த அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் அசத்திய பட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் அன்ரே ரசல் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

Jasprith Bumrah vs KKR

அப்போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றாலும் கூட வெறும் 9 பந்துகளில் 5 விக்கெட்களை மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அந்த அளவுக்கு அசத்தலாக செயல்பட்ட பும்ராவை பார்த்து தான் தாமும் 3 விக்கெட்டுகளை எடுத்து பார்முக்கு திரும்பியதாக அப்போட்டியில் கொல்கத்தாவுக்கு விளையாடிய பட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்த வருட ஐபிஎல் தொடரில் நிறைய போட்டிகளில் 4 ஓவர்களில் 50க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கி வந்த அவர் ஒரு கட்டத்தில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

பும்ராவை பார்த்து:
அப்படிப்பட்ட சூழ்நிலையில் மும்பைக்கு எதிரான அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தங்களது அணிக்கு எதிராக ஜஸ்பிரித் பும்ரா எவ்வாறு பந்துவீசினார் என்பதை பார்த்து அதை மீண்டும் 2-வது இன்னிங்ஸ்சில் மும்பைக்கு எதிராக அதே மாதிரியாக வீசி வெற்றி கண்டதாக அவர் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இதுபற்றி அந்த போட்டி முடிந்த பின் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.

cummins

“பும்ரா மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவர் ஸ்டம்ப்களுக்கு மேல்புறம் பேக் ஆஃப் லென்த் பந்துகளை வீசினால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக அடிக்க திணறுகிறார்கள் என்பதை எங்களுக்கு காட்டினார். மேலும் டிஒய் பாட்டில் மைதானமும் பெரிய அளவில் இருந்ததால் அதில் சிக்ஸர் அடிக்க வேண்டுமெனில் பேட்ஸ்மேன்கள் துல்லியமாக அடிக்க வேண்டியிருந்தது. எனவே நேரான லைன் மற்றும் பேக் ஆஃப் லென்த் ஆகியவற்றில் பந்து வீச வேண்டும் என்ற எங்களின் திட்டம் சிறப்பாக அரங்கேறியது” என்று ஒரே போட்டியில் பும்ராவை பார்த்து கற்றுக்கொண்டதாக கூறினார்.

- Advertisement -

மேலும் இந்த வருட ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் சுமாராக பந்து வீசியதையும் அவரே ஒப்புக்கொண்டார். அதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “முதல் 4 போட்டிகளில் உண்மையாகவே நான் சிறப்பாக பந்து வீசவில்லை. அதனால் கடந்த சில போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த போது அபாரமாக பந்து வீசிய டிம் சவுதியை உன்னிப்பாக பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. எனவே அவரிடம் இருந்து ஒரு சில அம்சங்களை கற்றுக் கொண்ட நிலையில் வாய்ப்பு கிடைத்ததும் அதை களத்தில் செய்ய முயற்சித்து பொறுப்புடன் பந்து வீசினேன்” என்று பேசினார்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 பைனலில் ஏஆர் ரஹ்மான் கலந்து கொள்வார் – கங்குலி அறிவிப்பு ! எதற்காக தெரியுமா?

மும்பைக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் பெரிய வெற்றியை சுவைத்த ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா 5-வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அதனால் தப்பிய அந்த அணி அடுத்த 2 போட்டிகளில் நிச்சயம் வென்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement