டெஸ்ட் சாம்பியன்ஷிப் : இங்கிலாந்து மைதானத்தில் நியூசிலாந்துக்கு ஒரு ப்ளஸ் இருக்கு – பேட் கம்மின்ஸ் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் போட்டிகள் தற்போது இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதால் அடுத்ததாக இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கின்றனர். இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற இருக்கிறது.

INDvsNZ

இந்த போட்டியில் யார் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றுவார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எது என்பது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக அளித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்த இறுதிப் போட்டி குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இரண்டு அணிகளும் கடந்த இரண்டு மாதங்களாக எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை என்பதால் இந்த இறுதிப் போட்டியின் போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இந்திய அணி காட்டிலும் நியூசிலாந்து அணிக்கு இங்கிலாந்து நாட்டில் இருக்கும் சூழல் சாதகமாக இருக்கும்.

nz

ஏனெனில் இங்கிலாந்து நாட்டில் இருக்கும் சூழ்நிலைகளில் நியூசிலாந்து அணி வீரர்களுக்கு பெரிய மாற்றம் ஒன்றும் இருக்காது. அவர்களால் இங்கிலாந்து மைதானத்தின் தன்மையை விரைவாக அறிந்து கொண்டு விளையாட முடியும் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைமுறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் கடினமாக இருந்தாலும் இது ஒரு சிறப்பான நடைமுறை.

ஒவ்வொரு டெஸ்ட் தொடரும், வெறும் டெஸ்ட் தொடர் மட்டுமல்லாமல் அதை தாண்டி ஒரு நோக்கத்துடன் விளையாடப்பட்டு வருகிறது. இறுதியில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது என்பதை பார்க்க எனக்கும் ஆவலாக உள்ளது. மொத்தத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைமுறை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement