இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவது குறித்து நான் யோசிக்கவில்லை – குண்டை தூக்கி போட்ட முன்னணி வீரர்

INDvsAUS
Advertisement

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இருக்கிறது. அங்கு நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நவம்பர் 27ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்கியிருக்கிறது. இதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் சிட்னி நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றர்.

ind vs aus

14 நாட்களுக்கு பிறகு வைரஸ் இல்லாத வீரர்கள் அனைவரும் சிட்னி நகரத்தில் அனுமதிக்கப்படுவார்கள். உடனடியாக இந்த தொடர் துவங்கிவிடும். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்த ஒருநாள் தொடரில் விளையாட இருப்பது சந்தேகத்திற்டமாகியுள்ளது. அவரிடம் கேட்டதற்கு. இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்பது போல் பேசியிருக்கிறார்.

- Advertisement -

டி20 தொடரில் இடம் பெறாத அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்றிருக்கிறார்.
ஐபிஎல் தொடர்பாக மூன்று மாதங்கள் இந்தியாவில் இருந்த இவர் உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்று மீண்டும் நீண்ட தொடரில் விளையாட வேண்டி இருக்கிறது இதன் காரணமாகவே இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. என்று தெரிவித்திருக்கிறார்.

PatCummins

இது தொடர்பாக அவர் கூறுகையில்…உயிர் பாதுகாப்பு வளையத்தில் ஒரு சில நபர்களுடன் அதிகப்படியான நாட்கள் இருக்க வேண்டி இருக்கிறது. ஐபிஎல் தொடரில் இப்படித்தான் பல மாதங்கள் தங்கி இருந்தோம். உடனடியாக மீண்டும் விமானத்தில் பயணித்து ஆஸ்திரேலியாவிற்கு வந்தது ஒரு களைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Cummins

இதன் காரணமாக தற்போது வரை இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவது குறித்து நான் இன்னும் யோசிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் பேட் கம்மின்ஸ்.

Advertisement