- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என்னா அடி.. மனுஷன் விளையாடுவானா அங்க? இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் மீது கமின்ஸ் அதிருப்தி

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியா பரிதாபமாக தோற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் அதற்கும் சேர்த்து இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

பர்மிங்காம் நகரில் இருக்கும் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 587, 427/6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்தை 407, 271 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா பர்மிங்கம் மைதானத்தில் முதல் முறையாக வெற்றி பெற்ற ஆசிய அணியாக சாதனை படைத்தது.

- Advertisement -

மனுஷன் விளையாடுவானா:

மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஆஸ்திரேலியா விளையாடிய 2வது டெஸ்ட் போட்டியும் நேற்று முடிவடைந்தது. 2 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. செயின்ட் ஜார்ஜ்’ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 133 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.

அதனால் 2 – 0 (2) என்ற கணக்கில் எதிர்பார்த்ததைப் போலவே பலம் குறைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒய்ட்வாஸ் செய்து ஆஸ்திரேலியா எளிதாக வென்றது. அந்தப் போட்டியின் முடிவில் பர்மிங்காம் போட்டியைப் பற்றி ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு மொத்தமாக 1691 ரன்கள் அடிக்கப்பட்ட அது போன்ற பிட்ச்சில் மனுஷன் விளையாடுவானா? என்ற வகையில் கமின்ஸ் அதிருப்தியான பதிலை கொடுத்தார்.

- Advertisement -

கமின்ஸ் அதிருப்தி:

ஏனெனில் அந்த பிட்ச் பவுலர்களுக்கும் சமமாக சாதகமாக இல்லை என்று அவர் மறைமுகமாக தெரிவித்தார். அங்கே பவுலர்கள் அடி வாங்கியது பற்றி கமின்ஸ் பேசியது பின்வருமாறு. “இந்தியா – இங்கிலாந்து போட்டியை நான் பார்க்கவில்லை. ஒருவேளை மார்னஸ் லபுஸ்ஷேன் பார்த்திருக்கக்கூடும். இனிமேல் நாங்கள் அத்தொடரின் மீது ஒரு கண்ணை வைத்துக் கொள்வோம்”

இதையும் படிங்க: இனிமேல் வெளிநாட்டிலும் நாங்க தான் கில்லி.. பாகிஸ்தானை முந்திய இந்திய அணி.. அபாரமான சாதனை

“அங்கே யார் பவுலராக விளையாட விரும்புவார்கள்? அது எனக்கு ஆச்சரியமாக இல்லை (வரலாற்றில் பர்மிங்காம் மைதானத்தில் 3வது அதிக ரன்கள் அடிக்கப்பட்டது பற்றி). இந்த வாரம் இங்கே நடைபெற்ற போட்டியையும் அங்கே நடைபெற்ற போட்டியையும் பார்க்கும் போது டெஸ்ட் கிரிக்கெட் 2 வித்தியாசமான விளையாட்டு போல் தெரிகிறது. 1 – 1 என்ற கணக்கில் வந்துள்ள அந்தத் தொடர் நன்றாக இருக்கும் போல தெரிகிறது” என்று கூறினார்.

- Advertisement -