- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பிளான் ஏ, பி ரெடி.. காபாவில் இம்முறை இந்தியா தப்பிக்க முடியாது.. அதுக்கு ரெடியா இருங்க.. கமின்ஸ் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் தலைமையில் விளையாடிய 2வது போட்டியில் மோசமாக விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது.

இதை அடுத்து மூன்றாவது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருக்கும் புகழ்பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் துவங்க உள்ளது. கடைசியாக 2021இல் அங்கே விளையாடிய போட்டியில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா தோற்கடித்த இந்தியா வரலாற்று வெற்றியை பெற்றது. அதே உத்வேகத்துடன் மூன்றாவது போட்டியில் விளையாடி வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.

- Advertisement -

கமின்ஸ் எச்சரிக்கை:

முன்னதாக இரண்டாவது போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தலையை குறி வைத்து பவுன்சர்களை வீசினார். அதை பயன்படுத்தி 5 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியாவை 175க்கு சுருட்டி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் காபாவிலும் அதே போன்ற திட்டத்தை தயாராக வைத்துள்ளதாக அவர் இந்தியாவை எச்சரித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் அடுத்த போட்டியிலும் பவுன்சர்களை வீசுவதற்கு சாத்தியங்கள் உள்ளன. இரண்டாவது போட்டியில் அது வேலை செய்தது. நீங்கள் எப்போதும் பிளான் பி’யை தயாராக வைத்திருப்பீர்கள் அல்லது அந்தத் திட்டம் வேலையாகவில்லையெனில் பிளான் ஏ பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுக்க விரும்புவீர்கள்”

- Advertisement -

இந்தியா தப்புமா:

“2வது போட்டியில் அந்தத் திட்டம் வேலை செய்ததால் இந்தப் போட்டியிலும் ஏதோ ஒரு நேரத்தில் அதை நாங்கள் பயன்படுத்துவோம். காபா பிட்ச்சை நேற்று நான் பார்த்தேன். அது கடந்த சில வருடங்களை போல் நன்றாக உள்ளது. கடந்த சில தினங்களாக சூரிய வெளிச்சமும் அதன் மீது நன்றாக பட்டது. இருப்பினும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டியை போல் அது இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: லில்லி, ராபர்ட்ஸ், மார்ஷல், அக்ரம் மாதிரி பும்ரா அதுக்கு குறுக்க நிற்கிறாரு.. கிரேக் சேப்பல் மெகா பாராட்டு

அந்த வகையில் மூன்றாவது போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க ஒன்றுக்கு 2 திட்டங்கள் வைத்துள்ளதாக கமின்ஸ் கூறியுள்ளார். மறுபுறம் இரண்டாவது போட்டியில் இந்தியா 2 அரை நாட்களில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியாவின் திட்டங்களை நொறுக்கி தோல்வியிலிருந்து தப்பி இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

- Advertisement -