ஈஸியா விடமாட்டாங்க.. அந்த 2 வீரர்களும் எப்படியாவது இந்தியாவ ஜெயிக்க வெச்சுருவாங்க.. கமின்ஸ் பாராட்டு

Pat Cummins 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஐசிசி விருது வழங்கிய கௌரவித்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 2023 காலண்டர் வருடத்தில் அசத்திய கிரிக்கெட்டர்களுக்கான விருதை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் குவித்து மாபெரும் உலக சாதனை படைத்தார்.

அதனால் தொடர் நாயகன் விருது வென்று இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர் என்ற ஐசிசி விருதை வென்றார். அது போக 2023ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த கனவு அணியிலும் தேர்வான விராட் கோலி இந்தியாவுக்கு மற்றுமொரு கௌரவத்தை சேர்த்தார். அந்த கனவு அணிக்கு இந்தியாவின் ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

சிறந்த வீரர்கள்:
மேலும் அந்த அணியில் உலகக் கோப்பை உட்பட 2023 காலண்டர் வருடத்தில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகிய இந்திய வீரர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால் அவர்கள் அனைவரையும் மிஞ்சும் அளவுக்கு 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை ஆகிய 2 ஐசிசி கோப்பைகளை வென்று மாபெரும் சாதனை படைத்த ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் 2023ஆம் ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் ஐசிசியின் உச்சகட்ட விருதை வென்றார்.

அது போக ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இந்திய வீரர்கள் உள்ள 2023ஆம் ஆண்டின் சிறந்த கனவு ஒருநாள் அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் களத்தில் எதையும் எளிதாக விடாமல் வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுக்கும் திறமையை கொண்டிருப்பதாக பட் கமின்ஸ் பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து சூப்பராக செயல்படக் கூடியவர்கள். அவர்களை நீங்கள் எப்போதும் போட்டியிலிருந்து வெளியே வைக்க முடியாது. அவர்கள் எப்போதும் தன்னுடைய அணியை தடுமாற்றத்திலிருந்து இழுத்துக் கொண்டு வந்து வெற்றியை பெற்றுக் கொடுக்கும் வழியை கண்டறியக் கூடியவர்கள். அவர்கள் இருக்கும் இந்த அணியில் நானும் இருப்பது மிகவும் ஸ்பெஷலாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஜாம்பவான் சச்சின் மாற்று யுவ்ராஜ் சிங்கின் சாதனையை தகர்ந்த 12 வயது இளம்வீரர் – விவரம் இதோ

இதையும் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி சொந்தக் காரணங்களுக்காக விளையாடவில்லை. அதே போல முதல் போட்டியில் நன்றாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா காயத்தால் இரண்டாவது போட்டியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement