பிரதமரின் நிதி கணக்கிற்கு 37 லட்ச ரூபாய் நன்கொடையாக அளித்த கொல்கத்தா வீரர் – குவியும் பாராட்டு

Cummins
- Advertisement -

வீட்டில் உள்ள தொலைக்காட்சியை ஆன் செய்தாலே கொரோனா தொடர்பான செய்தி தான் அதிகமாக ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக அதிக அளவில் தொற்று பரவி கொண்டு வருகிறது. இந்தியாவில் ஒரு நாளைக்கு மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் மக்கள் மருத்துவமனைகளை நோக்கி விரைந்து ஓடுகின்றனர். ஆனால் அங்கே அவர்களுக்கு போதுமான படுக்கைகளும் ஆக்சிஜன் சிலிண்டர் களும் இல்லை என்பது வேதனை தரும் விஷயமாக அமைந்து வருகிறது.

Corona-1

- Advertisement -

படுக்க படுக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை மூச்சு விடுவதற்கு ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் பல மக்கள் இழந்து வந்துள்ள செய்தி அனைரையும் வேதனைப்படுத்தி உள்ளது. இந்திய மக்கள் அனைவரும் இப்படி தவித்து வரும் நிலையில் முடிந்த வரை வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பிரதமர் உடைய நிதி கணக்கில் போட்டு உதவி செய்கின்றனர். இன்னும் ஒரு சிலர் தங்களால் முடிந்த வரையில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி இந்தியாவுக்கு அனுப்புகின்றனர்.

இந்நிலையில் நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்திய மக்களின் நலனுக்காக பிரதமர் நிதி உதவி கணக்கில் 50000 டாலர்கள் நிதியுதவி அளித்துள்ளார். 50,000 டாலர் இந்திய மதிப்பில் மதிப்பில் ரூ. 37,36,590.00 ஆகும். நிதி உதவி செய்ததோடு மட்டுமில்லாமல் மற்ற அனைத்து கிரிக்கெட் வீரர்களையும் நிதி உதவி செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.

cummins 1

இது மாதிரியான நேரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருவது ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படுத்தும். ஆனால் நாங்கள் இங்கே விளையாடுவதன் மூலம், மக்கள் போட்டிகளைப் பார்த்தாவது சந்தோஷம் அடைய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் விளையாடுகிறோம். மனரீதியாக மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர் என்பதே உண்மை. அவர்களை சிறிது ஆசுவாசப்படுத்த இது மாதிரியான கேளிக்கை பொழுதுபோக்கு அம்சங்கள் நிச்சயம் தேவை. எனவே நாங்கள் முடிந்தவரை போட்டிகளை நன்றாக மற்றும் பாதுகாப்புகள் விளையாடி அவர்களை சந்தோஷப்படுத்தும் என்று நெகிழ்ச்சியாக தன்னுடைய உரையில் கூறியுள்ளார்.

பேட் கம்மின்ஸ் செய்த இந்த நிதிஉதவி இந்திய அளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவரது டுவிட்டர் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் பலரும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Advertisement