- Advertisement -
உலக கிரிக்கெட்

அவர் ஜோக் பண்ணாரு.. ஆஸ்திரேலியர்களான நாங்க இப்படி செய்வோமா.. இங்கிலாந்துக்கு ஆறுதல் சொன்ன கமின்ஸ்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி போராடி வருகிறது. ஜோஸ் பட்லர் தலைமையில் அதிரடியான வீரர்களைக் கொண்டதால் இந்த வருடம் முதல் அணியாக இங்கிலாந்து சூப்பர் 8க்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த அந்த அணியின் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்தானது.

மறுபுறம் ஸ்காட்லாந்து முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளை பெற்றது. அதனால் நெருக்கடியை சந்தித்த இங்கிலாந்து அணி ஓமனுக்கு எதிரான 3வது போட்டியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் காரணமாக நமீபியாவுக்கு எதிரான தங்களுடைய கடைசி போட்டியில் வென்றால் சூப்பர் 8க்கு செல்லும் வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைக்கும்.

- Advertisement -

ஜோக் சொன்னாரு:
ஆனால் அது ஆஸ்திரேலியாவின் கையில் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா தங்களுடைய கடைசி போட்டியில் ஸ்காட்லாந்தை சந்திக்கிறது. அந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தினால் மட்டுமே இங்கிலாந்துக்கு சூப்பர் 8 வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தங்களுடைய பரம எதிரியான இங்கிலாந்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தடுமாறி வருவதாக ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்தார்.

எனவே இங்கிலாந்தை லீக் சுற்றுடன் வெளியேற்றுவதற்கு தேவையான முயற்சிகளையும் திட்டங்களையும் ஸ்காட்லாந்து போட்டியில் செய்வோம் என்றும் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அது சர்ச்சையையும் இங்கிலாந்து ரசிகர்களிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆஸ்திரேலியர்களை பொறுத்த வரை தோல்வியை சந்திப்பதற்காகவோ அல்லது எதிரணியிடம் கருணை காட்டுவதற்காகவோ விளையாடுவது கிரிக்கெட்டின் நேர்மை தன்மைக்கு எதிரானது என்று பட் கமின்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே ஜோஸ் ஹேசல்வுட் நகைச்சுவைக்காக சொன்னதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “களத்திற்கு சென்று விளையாடும் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களுடைய சிறந்தவற்றை கொடுக்க முயற்சிக்க வேண்டும். ஒருவேளை அதை செய்யாவிட்டால் நீங்கள் கிரிக்கெட்டின் நேர்மை தன்மைக்கு எதிராக செயல்படுவீர்கள்”

இதையும் படிங்க: காத்திருக்கும் தடை.. இங்கிலாந்தை நாக் அவுட் செய்ய நினைக்கும் ஆஸியை எச்சரிக்கும் 2.11 ஆர்ட்டிக்கல் விதிமுறை

“நான் ஹேசல்வுட்டிடம் பேசினேன். மற்றொரு நாளில் அவர் கொஞ்சம் நகைச்சுவை சொன்னது வேறு வழியில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொடரில் நன்றாக செயல்பட்டு வரும் ஸ்காட்லாந்துக்கு எதிராக நாங்கள் கடினமாக விளையாட உள்ளோம். நீங்கள் சர்வதேச உலகக் கோப்பையின் நடுப்பகுதியில் இருக்கிறீர்கள். எனவே அந்தப் போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல முயற்சிப்பீர்கள். ஆக்ரோஷமாக இருக்கக் கூடாது என்ற மனதுடன் நான் களத்திற்கு சென்றது கிடையாது. எங்களுடைய வீரர்களும் இதுவரை அப்படியே விளையாடியுள்ளனர்” என்று கூறினார்.

- Advertisement -