நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 76 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இந்திய அணி அடைந்த இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதோடு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பும் கடினமாக மாறியுள்ளது.
சஞ்சு சாம்சனை அவருக்கு பதிலாக கொண்டு வாங்க : பார்த்திவ் பட்டேல்
இந்திய அணி இந்த சூப்பர் 8 சுற்றில் அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் விளையாடுகிறது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிகளிலும் இந்திய அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் அது நடக்குமா? என்பது உறுதி கிடையாது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : நிச்சயம் ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சளரான அக்சர் பட்டேலை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.
கடந்த காலங்களில் இந்திய அணிக்காக அக்சர் பட்டேல் மிகச்சிறப்பான பங்களிப்பினை வழங்கியுள்ளார். அதனால் கண்டிப்பாக அவர் அடுத்த போட்டியில் விளையாட வேண்டும். அதேபோன்று நிச்சயம் சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வர வேண்டும். அதனால் அபிஷேக் சர்மாவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன்.
இதையும் படிங்க : அந்த 2 பேரையும் நம்பாம உடனடியா அவரை அணிக்குள் கொண்டு வாங்க – சோயிப் அக்தர் கருத்து
தற்போது பார்மின்றி விளையாடி வரும் திலக் வர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை கொண்டு வரலாம். ஏற்கனவே சி.எஸ்.கே அணி சஞ்சு சாம்சனை நம்பி அணிக்குள் கொண்டு வந்துள்ளது. எனவே சென்னை மைதானம் சஞ்சு சாம்சனுக்கு மன ரீதியாக சாதகத்தை கொடுக்கலாம் என பார்த்திவ் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.



