தோனி, ரோஹித் மாதிரி நம்ம ஆளு கோலி நடந்துக்க மாட்டாரு. அவரு வழி தனி வழி – பார்த்திவ் பட்டேல் ஓபன் டாக்

Captain
- Advertisement -

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஆன பார்த்திவ் பட்டேல் தனது இளம் வயதிலேயே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர். தோனியின் வருகைக்குப் பிறகு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காத பார்த்திவ் பட்டேல்க்கு அரிதாகவே அவ்வப்போது வாய்ப்புகள் கிடைத்தது. இப்போது அவருக்கு வயது ஆகிவிட்டதால் அவருக்கு இந்திய அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறலாம்.

patel

- Advertisement -

இருப்பினும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக துவக்க வீரராக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது ஆகாஷ் சோப்ரா உடன் நேரலையில் பேசிய பார்த்திவ் பட்டேல் தனது கிரிக்கெட் வாழ்வில் தான் சந்தித்த அனுபவங்கள் குறித்து பல விடையங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதில் கோலியின் கேப்டன்சி குறித்து அவர் பேசியதாவது :

கோலியின் கேப்டன்சி எப்போதும் வித்தியாசமானது. அவர் அனைத்திலும் முன்னின்று அணியை வழி நடத்துவதில் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும் என்று நினைப்பார். எப்போதும் களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு கொண்டிருப்பார். அதுவே அவருடைய பாணி ஆனால் தோனியும், ரோஹித்தும் அப்படியல்ல.

Kohli

அவர்கள் மிகவும் அமைதியானவர்கள். கோலி அதற்கு அப்படியே எதிர்மறையான குணம் கொண்டவர் கோலி என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் தோனி ஒவ்வொரு வீரர்களின் திறமை பற்றி நன்கு அறிவார். அந்த வீரரின் முழுத்திறனையும் அறிந்து கொண்டு அவர்களின் ஆற்றலை அப்படியே வெளியே கொண்டு வருவார்.

Parthiv

ரோகித் சர்மா திட்டமிடுதலில் கெட்டிக்காரர். மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் வழி நடத்துவதில் நாம் அதை புரிந்து கொள்ளலாம். 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து ரோஹித்தின் திறன் நன்றாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. வீரர்களை உபயோகப்படுத்தி கொள்வதில் தோனியும் ரோஹித்தும் சிறந்தவர்கள் என்று பார்த்திவ் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement