தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாட ஆரம்பித்ததில் இருந்து பல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அவர்களது இடத்தை இந்திய அணியில் இழந்துள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் தற்போது அந்த நிலை குறித்து இந்திய அணியின் அனுபவ வீரரான பார்த்திவ் பட்டேல் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய அணியில் மிக இளம் வயதிலேயே டெஸ்ட் அணியில் விளையாடியவர் பார்த்திவ் பட்டேல். கிட்டத்தட்ட 17 வயது இருக்கும்போதே இந்திய அணிக்காக அவர் அறிமுகமாகி விட்டாலும் தோனியின் வருகைக்குப் பிறகு இந்திய அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். மேலும் இந்திய அணியில் அவர் நிரந்தர இடம் பிடிப்பது அரிதாகவே இருந்தது.
இந்நிலையில் தற்போது இந்திய அணியில் மீண்டும் திருப்பம் வாய்ப்பே இல்லை என்றாலும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார் பார்த்திவ் பட்டேல். இந்நிலையில் கடந்தாண்டு அளித்த பேட்டி ஒன்றில் : தோனி கிரிக்கெட் விளையாடிய தொடங்கிய காலத்திற்கு முன்பே நாங்கள் எல்லாம் பயிற்சி எடுக்க துவங்கி விட்டோம்.
ஆனால் நாங்கள் சரியாக விளையாடவில்லை. அப்படி சரியாக நாங்கள் விளையாடி இருந்தால் இன்று தோனியால் கூட அணியில் இடம் பிடித்திருக்க முடியாது. ஆனால் கிரிக்கெட்டில் தோனி மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. பலர் என்னிடம் வந்து நீ பிறந்த ஆண்டு சரி இல்லை நீ சில ஆண்டுகள் முன் கூட்டியோ அல்லது பல ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்திருக்க வேண்டும் என்று கூறினார் என வருத்தத்துடன் பார்த்திவ் பட்டேல் பேசினார்.
மேலும் இது குறித்து பார்த்திவ் பட்டேல் தொடர்ந்து பேசுகையில் : இப்போதும் எப்போதும் நேரத்திற்கு தகுந்த மாதிரி சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். அந்த சூழ்நிலையில் இருந்து ஓடி ஒளிந்து கொள்ள நினைக்கக்கூடாது. அப்போது இருந்த சூழ்நிலையில் தோனி கேப்டனாக இருந்தார். அப்போது அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கு பெரும் போட்டி இருந்தது அந்த சூழ்நிலை நான் ஒத்துக்கொண்டேன்.
அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு எனக்கான பாதைகளை நானே பாத்து கொண்டேன். அந்த மனோதிடம் தான் என்னை தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வைக்கிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. பார்த்திவ் பட்டேல் இதுவரை இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில், 38 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.