இங்கிலாந்து பிட்ச்ல எப்படி விளையாடனும்னு அவருக்கு நல்லா தெரியும். உஷாரா இருங்க – இந்திய வீரர்களை எச்சரித்த படேல்

Parthiv
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டே வரும் அதே சமயம் இந்த போட்டியின் மீதான ரசிகர்களின் ஆர்வமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் மோத விருக்கின்றன. இது ஐசிசி நடத்தும் தொடர் என்பதால், இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற இரண்டு அணிகளுமே மும்மரம் காட்டி வருகின்றன. இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டனான விராட் கோஹ்லியின் ஆட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

INDvsNZ

- Advertisement -

முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலி இங்கிலாந்தில் எப்படி செயல்படபோகிறார் என்று ஆருடம் சொல்லி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல், விராட் கோஹ்லியைப் போலவே இந்திய அணியானது கேன் வில்லியம்சனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும் என்று தனது கருத்தைக் கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், விராட் கோஹ்லி மற்றும் கேன் வில்லியம்சன் என இந்த இரண்டு வீரர்களின் ஆட்டமும் இந்த இறுதிப்போட்டிக்கு மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிது.

இந்திய அணியில் விராட் கோஹ்லியின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ அதே போல் நியூசிலந்து அணிக்கு கேன் வில்லியம்சனின் ஆட்டமும் மிக முக்கியமானது. இங்கிலாந்து ஆடுகளங்களில் மிகச் சிறப்பாக செயல்படும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக கேன் வில்லியம்சன் திகழ்கிறார். அவர் இதற்கு முன்பு இங்கிலாந்தில் விளையாடிய போட்டிகளிலேயே அவருடைய திறமை என்னவென்று நிரூபித்து இருக்கிறார் என்பதோடு மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் சூழ்நிலைகளில் எப்படி விளையாட வேண்டும் என்றும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் என்று கூறிய அவர், கேன் வில்லியம்சனின் விக்கெட்டை எடுக்க இந்திய பவுலர்களுக்கு ஒரு ஆலோசனையையும் வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்து பேசிய அவர்,

williamson

கேன் வில்லியம்சன் எப்போதுமே பந்தை தாமதமாக விளையாடும் திறன் உடையவர். எனவே அவருக்கு எதிராக பந்து வீசும் போது ஒரே லைன் அன்ட் லெந்தில் வீசாமல் வெவ்வேறு லெந்தில் பந்துகளை வீச வேண்டும். ஏனெனில் அவர் எப்போதுமே தனது ஃபுட் ஒர்க்கால் அற்புதமாக டிபன்ஸ் ஆடுவார். எனவே அவருக்கு எதிராக ஒரே மாதிரியான பந்துகளை வீசாமல் மாற்றி மாற்றி வீசினால் தான் அவருடைய விக்கெட்டை விரைவிலேயே வீழ்த்த முடியும் என்று இந்திய பவுலர்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார் பார்த்தீவ் பட்டேல்.

Williamson

தற்போது நியூசிலாந்து அணியானது இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியின்போது முழங்கையில் காயம் ஏற்பட்ட கேன் வில்லியம்சன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். கடந்த சில மாதங்களகவே முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர், இந்திய அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கு பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக கடந்த இரண்டாம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்ற இந்திய அணி வீரர்கள் அனைவரும் தனிமை முகாமில் இருந்து வெளியே வந்து தற்போது, மைதானங்களில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement