ஜடேஜாவுக்கு பதிலா விளையாடனுனா அது இவரால தான் முடியும் – பார்த்திவ் படேல் கணிப்பு

Parthiv

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி பிசிசிஐ-யால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் 20 முதன்மை வீரர்களும், கூடுதல் 4 வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போகும் அணி என்ன ? என்று காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

INDvsNZ

மேலும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புக்கு பிறகு மீண்டும் இந்திய அணி இந்த போட்டியில் கலந்து கொள்வதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த தொடரில் சில வீரர்களின் பெயர் இடம்பெறாதது குறித்து பல விமர்சனங்கள் உலாவி வந்தாலும் இந்திய அணி நிச்சயம் இந்த போட்டியை வெற்றி பெறும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்த இறுதிப் போட்டி குறித்து பேசிய உள்ள இந்திய அணியின் வீரரான பார்த்திவ் படேல் கூறுகையில் : இந்திய அணி இப்போது சரியான பலத்துடன் உள்ளது. அணியில் உள்ள முன்னணி வீரர்கள் நியூசிலாந்து அணியை ஒப்பிடும் வகையில் சம பலம் உடையவர்கள் இந்திய அணியில் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதனால் நியூசிலாந்து அணி இவர்களுக்கு எதிராக ரன் குவிக்க நிச்சயம் தடுமாறும்.

IND

அதேபோன்று பேட்டிங்கிலும் நாம் பயப்பட தேவையில்லை. ரோகித் சர்மா, கில், கோலி, ரஹானே, புஜாரா, ரிஷப் பண்ட் என பலரும் இருக்கின்றனர். இதனால் இந்திய அணியின் பேட்டிங் வரிசையும் பலமாகத்தான் உள்ளது. அதே போன்று பின்வரிசையில் பேட்டிங் செய்யும் சில பவுலர்களால் பேட்டிங் செய்ய முடியும். அந்த வகையில் கடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது காயம் காரணமாக ஜடேஜா விளையாடாததால் அக்சர் பட்டேல் அந்த தொடரில் அறிமுகமாகி விளையாடினார். விளையாடிய முதல் தொடரிலேயே ஆட்டநாயகன் மட்டுமின்றி தொடர் நாயகன் விருதுகளை வென்று அவர் அசத்தியிருந்தார்.

- Advertisement -

axar

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அக்சர் படேலின் ஆட்டத்தை வியந்த கோலி வெகுவாகப் பாராட்டிப் பேசி இருந்தார். இதனால் ஜடேஜா விளையாடவில்லை என்றால் அவரது இடத்தில் மாற்று வீரராக நிச்சயம் அக்சர் படேல்தான் ஆல்-ரவுண்டராக விளையாடுவார். அதற்கு உண்டான அனைத்து தகுதியும் திறமையும் அவரிடம் உள்ளது என்றும், கோலிக்கு பிடித்த வீரராக அவர் இருக்கிறார் என்றும் பார்த்திவ் படேல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement