தோனியின் இல்லத்திற்கு சென்று நேரில் அவரை சந்தித்த பார்திவ் பட்டேல் – காரணம் இதுதான்

Parthiv

இந்தியாவில் தற்போது தியோதர் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கும் இடையேயான போட்டி நேற்று ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி முடிவைடந்ததும் இந்திய பி அணியின் வீரரும், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பருமான பார்திவ் பட்டேல் தோனியை அவரது வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்தார். தற்போது அவர்களது சந்திப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி தியோதர் கோப்பையின் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைப்பெற்றதால் போட்டி முடிந்து ப்ரீயாக இருந்த பார்திவ் பட்டேல் அவரது சொந்த விருப்பதிகாக தோனியை நேரில் சென்று பார்த்ததாகவும் இருவரும் சிலமணி நேரங்கள் உரையாடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.